தாய்

உனக்கு உவமைகள்
தேவையில்லை
நீயே உவமையாகிறாய்!
அன்பெனும் மழையும்
நிலவாய் அரவணைப்பும்
குளிரோடையென எனைச்
சுற்றி உந்தன் நினைவுகளும்...

போதும் போதும்!
வரிகள் சிக்கவில்லை
வார்த்தை தேடல்கள்
நிற்கவில்லை...

எதைக் கொண்டு நான்
உந்தன் பெருமை கூற...

தாயே பிறவியால்
நான் உனக்கு சேய் தான்
ஆனால்
நான் பொழியும் அன்பால்
நீயும் எனக்கு சேய் தான்

6 பின்னூட்டங்கள்:

amutha said...

தாயின் கவிதை

தந்த விதம் இனிமை

BRINDHA said...

மிக மிக அழகான வெளிப்பாடு.

sathya said...

arumai nanabare intha kavithai

swap said...

Mihavum arumayana varihal

Nila said...

என் தாயின்
கருவறை
என்னவாக
இருக்கும?

உணர்ந்தேன்....
நான்
என் மகனை
ஈன்றெடுத்த போது.......

வினோத் குமார் கோபால் said...

அமுதா. ப்ருந்தா. சத்யா மற்றும் சுவப்னா ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்

நிலா தங்களின் இனிமையான நினைவுப் பகிர்விற்கு மிக்க மிக்க நன்றி

Post a Comment