4

வெற்றி

மண்ணில் புதையுண்டு
சில காலம் கடத்திவிட்டு
பச்சிளஞ் சிறகுகளை
நிலத்தைக் குடைந்து
இலைகளாய் கையசைத்து
வெளிவரும்
தளிரின் பெருமை
இதுவல்ல
நீரையுறிஞ்சி
சூரியச் சுடரிழுத்து
இளங் குழந்தையாய்
புன்னகைப் பூக்கும்
மொட்டுக்கள் தெரிவதும்
பெருமையல்ல
பெற்ற குழந்தை
வாழ்வது ஒருநாள்
எனினும்
மகிழ்ச்சியாய் மலரும்
மலர்கள் தான்
நின் வெற்றி
0

மழை

முதிர்ந்த முத்துக்கள்
உதிர்ந்து சேர்வது
நிலத்தினிலே...
மழையே

நிலத்தரைந்த
மெய் சிலிர்ப்பை
நின் சில்லொலி
சொல்லும் நேரத்தில்
மெளனமாய்
மண் சிவந்து
மணம் வீசி
வாடைத் தெரித்தது
0

கண்ணாடி

மனமென்னும் இருட்டறையில்
நினைவுகளைப் புதையலிட்டேன்
இருட்டினில் உருமாறி
நிழலுருவம் காட்டும்
ஊடுருவல் கண்ணாடிபோல்
என் நினைவுகள்
நின்னுருவம் காட்டத்தான்