கவிதை

மொழியின் இனிமையை
உன் மூலம் காண்கிறேன்!

வார்த்தைகளால் அழகாய்
கோர்த்து வைத்த தோரணமாய்
செய்தி ஒன்று சொல்வதற்கு
வண்ணப் பூச்சுகளால்
இட்ட கோலம்
கவிதை

இளஞ் சுடரெரித்த பாலினிலே
சொட்டுச் சொட்டாய்
தேன் சேர்த்து
இனிக்க இனிக்க வந்து
தந்த சுவையினும் சுவையுடைய
என் உயிரென
நான் எண்ணும்
கவிதை

3 பின்னூட்டங்கள்:

Kavitha said...

Kavithai patriye kavithaya?? beautiful

காயத்ரி said...

கவிதையின்மேலொரு அழகான
கவிதை பாடி......!
கவிதைக்கு புகழாரம் சூட்டிய
கவிஞன் நீரும் புகழோடு வாழ்க!

Nithi... said...

மொழியின் இனிமையை
உன் மூலம் காண்கிறேன்!
nijamaava na kaaInkiran

Post a Comment