கானம்

இருளண்டிய மேகம்
தன் நுதலொடு
வெண்ணிற பொட்டுடுத்த
நிலவை ஒட்டும்
வேலை யதனில்
தன்மையனாய் மாறிய
மரம் ஈந்த
கானம் அதை
தனியனாய் உளவும்
இளங் காற்றரசன்
மெல்லியதாய் இசையுருக்கி
சலனத்தில் சுருண்டு
இடர்ப்பட்டுத் திரியும்
ஓடை நீரில்
இடைச் செருகி
இசை கரைக்கும்

3 பின்னூட்டங்கள்:

காயத்ரி சொன்னது…

அழகிய கவிதை!

"இளங்காற்று" "இளஞ்" என்று இருக்கிறது!

காயத்ரி சொன்னது…

இக்கவிதையில் தங்கள் வார்த்தைப்பிரயோகம் அருமை!

காற்றீந்த கானமா? மரமீந்த கானமா?

"மரம் ஈந்த" என்பது "தன்மையனாய் மாறிய" என்ற வரிக்கு முன்பு வந்தால் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது!

Arni சொன்னது…

Alagiya Varigal..

கருத்துரையிடுக