15

உன்னை பார்த்து இரசித்தேன்எப்படி தான் வரவழைத்தாய்?
என்னை,
நீ செல்லும் பாதையெல்லாம்...

தோழிகளிடம் பேசும் போதும்,
தங்கையோடு விளையாடும் போதும்,
தாய்மடி சாயும் போதும்,
குறுநகை உதிர்க்கும் போதும்,
குறும்புகள் செய்யும் போதும்,
கோவில் கருவறை பின் சுவற்றில்
தலைமுட்டி கும்பிடும் போதும்,
நந்தியோடு பேசும் போதும்,
உன்னை பார்த்து இரசித்தேன்.

ஒவ்வொரு நொடியும்
நிந்தன்
ஒவ்வொரு செயலையும்
இடையூறுகள் ஏதுமின்றி
எப்போதும் நான் இரசிக்க
நீ செல்லும் பாதையெல்லாம்
இப்படித் தான் வரவழைத்தாய்...

குரல்எங்கோ ஓர் இடத்தில்
நீ இன்றி தனியனாய்,
உந்தன் நினைவுகளோடு
உறவாடி நான் இருக்க...
அழகாய் நீ அனுப்பும்
குரல் மட்டும் கேட்கிறதே...

தாயே உன்னை நான்
பிரிந்து வாழும் காலம்
சிறிது தான் என்றாலும்...

பிரிவு கொடியதாய்
தோன்றுவதன் காரணம்
நின் அன்பு
என்பதை மட்டும்
நான் அறிவேன் தாயே...