மூக்குத்திநுதற் மையத்தில் விதையிட்டு
அழகாய் படர்ந்து தொங்கும்
மூக்கின் மேல் மலர்ந்த
அடர் செஞ்சிவப்பு நிறத்தால்
மிளிரும் மாணிக்க மூக்குத்தியை
என்றேனும் அழகு என்று
எவரேனும் சொன்னது உண்டோ...
பெண்ணே?

உனது முகப்பொழிவை
அதனுடன் ஒப்புமைபடுத்த
இயலுமோ பெண்ணே?

2 பின்னூட்டங்கள்:

Deepa said...

மிகவும் அழகு உங்கள் கவிதை!!! :)

Arun said...

gud one

Post a Comment