இப்படிக்கு பசுமை - 3பசும் பிடரியுதிர்த்த
பனையும் தென்னையும்,
தோல்கள் இழந்து
நரம்புகளாய் தோன்றும்
வேம்பும் மாமரமும்,
இளம் பச்சை ஆடையை
துறந்து அசையாது நிற்கும்
புற்களும் பயிர்களும்,
விடியலில்...
வெயில் கொடுமை தாங்காது
குடையேந்தும் மனித உயிர்களும்,
எந்தன் உயிர் தழைக்க
மழையை வேண்டி காத்திருக்கும்...

இப்படிக்கு,
பசுமை

1 பின்னூட்டங்கள்:

Deepa said...

hmmmmm true words!!So gud.. :)

Post a Comment