நிலைகொள்ளு மனமே...



பணம் என்னும் பேயும்
ஆசை என்னும் மிருகமும்
மரியாதை என்னும் அரக்கனும்
ஆட்கொண்ட மனித மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

பணப் பயனடைய...
அன்பையும் அரவணைப்பையும்,
தாயையும் தமிழையும்,
வீட்டையும் நாட்டையும்,
பிரியா மனதோடு,
அந்நிய நாட்டில்,
அடைகலம் புகுந்தனையே...
பகட்டு வாழ்கையை,
விரும்பிய மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

நாவோடு தேன்தமிழ்
பேசும் மனிதனையும்,
அனைவரின் அன்பையும்,
இல்லாத இட்டத்தே
தேடி அலையும்
ஒரு நிலையும்...
சென்ற இடத்தில்
எடுத்த செயலை
செவ்வனே செய்ய
எண்ணும்
மறு நிலையும்...
ஏற்று தவிக்கும்
மனித மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

நம் நாடு
உன்னை அழைப்பதை
கேள் தமிழா...
அன்பு அரவணைப்பும்
உன்னை அழைப்பதை
கேள் மனிதா...
தேன்தமிழ் வார்த்தைகளை
செவியோடு ருசிக்க
வா புதல்வா...

3 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

பணக் பயனடைய... ?
இல்லாத இட்டத்தே ?
--Sivaswami

Unknown சொன்னது…

நிலை கொள்ளாத தமிழனின் நிலையை சுட்டிக்காட்டிய உம் எழுத்தில் உள்ள சிறு பிழைகள் கண்ணுக்கு தெரியவில்லை தோழா

~ நிலை கொள்ளாத தமிழன் :)

KaniGold சொன்னது…

Its reflecting the exact artificial life of every one... And the compulsions of our life... nice...

கருத்துரையிடுக