கடனாய் தருகிறேன்!


கண்களை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை நீயே பாரடி...
அழகாய் என்னை,
அழகால் கொல்லும்,
இன்பங்களை உணர்த்தும்...

இதயத்தை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை எண்ணிப் பாரடி...
நீ நாணும் வகையில்,
உன்னுடைய வருகையை,
கவிதையாய் படிக்கும்...

என்னை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
என்னை கொஞ்சம் பாரடி...
நீ கொஞ்சி விளையாட,
நீ விரும்பும் பொம்மையாய்,
நாணி நிற்கும்...

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Nice

CHARLES said...

நல்ல வரிகள் அண்ணா

anbudansaran said...

கடனாய் ஒன்றும் தர வேண்டாம் .......................

பூக்களை பறிக்காதே !!!!!!!!!!!!!
என் வீட்டு அறிவிப்பு பலகை தாண்டி நீ
பறித்து சென்ற என் இதயத்தை கேள்........
நிசப்தமாய் உன் நினைவுகள்
எனை கொல்லும் சுகம் சொல்லும்.............

Post a Comment