0

இப்படிக்கு பசுமை - 4என்னை தொட்டுச்
செல்லும் போது,
எந்தன் குளிர்ச்சியை
களவாடிச் சென்றாய்...

போகும் வழியதனில்,
மனித உயிர்களுக்கு,
தானமாய் தந்தாய்...

அன்று...
எங்கு காணினும்,
பச்சை மிளிர்ந்தது.
இன்று...
வறட்சியே எஞ்சியுள்ளது.

இத்தருணத்தில்,
மனித உயிர்களுக்கென,
குளிர்ச்சியை கேட்டால்,
நான்
என்ன செய்வேன்?

இப்படிக்கு,
பசுமை
4

முத்தம்வெளிச்சம் இல்லா,
இதழ்களுக்கு இடையில்,
சத்தம் மட்டுமே,
சக்கரவர்த்தி...
அங்கே,
அவளும் நானும்
மெழுகுவர்த்தி...
6

காதல் கடிதம்உன் பார்வையால்,
எந்தன் வெட்கங்கள்...
உதிரக் கண்டேன்!

உன் தொடுகையால்,
எந்தன் நாணம்...
நொறுங்கக் கண்டேன்!

உன் சிரிப்பினில்,
எந்தன் மனம்...
சுருங்கக் கண்டேன்!

உன் அணைப்பினில்,
எந்தன் ஊணுடல்...
உருகக் கண்டேன்!

எந்தன் உயிரே...
நீ இல்லாத,
இடங்களில் எல்லாம்,
தனிமையில்,
வெறுமையை மட்டுமே,
நான் கண்டேன்.
வாடை தேடும் மலராய்,
உன் காதலி...
5

பூ முகம்காந்தள் பூவின்,
இரு விரல்கள் பிரிந்து...
குவளைப் பூவில்,
மலர்ந்தது கண்டேன்...

மாலை கதிரவன்
மத்தியில் இருக்கும்,
காந்தள் மலராய்
நின் முகம் கண்டேன்...
தேன் ஊறா,
குவளை மலராய்,
நின் இதழ்கள் கண்டேன்...

பூவினுள் மலர்ந்த
முதற் பூவாய்
நின் முகம் கண்டேன்...

0

ஈன்றோர் வாழ்த்துஎன்னை ஈன்றவள்
ஈய்ந்த உடலும்
ஈன்றவள் துணையான்
ஈய்ந்த உயிரும்
உரு கொண்டு
உள் மனதில்
நினைந்து நினைந்து
தேனாய் உருகி
பற்பல போற்றிகள்
ஈன்றோரை பாடுதாம்...