ஆனந்தம் ஆரம்பம்



குவளை மலரில்,
நீர் வடிவது போல்,
கலங்கம் படராத,
முக வாயில் வழிந்த,
எச்சில் உமிழ் நீரை,
கண்கொள்வதும் ஆனந்தமே...

பேசுதல் அறியாத,
பேசுதலும் தெரியாத,
நான் பெற்ற பேதையை,
யான் காணும்,
சிறு கனமும், ஆனந்தமே...

பிஞ்சு விரலால்,
முகம் வருடி,
எச்சில் வழிய,
நீ எனக்கு, அளித்த
முதல் முத்தமும், ஆனந்தமே...

காய்ந்த வயிற்றில்,
நீர் கரைப்பதற்கு,
என்னவளை அழைக்க,
நீ எழுப்பும்,
அழுகுரலும் ஆனந்தமே...

எந்தன் கை பிடித்து,
தத்தித் தத்தி, அடி வைத்து,
நீ தரும் புன்னைகையும்,
ஆனந்தமே...

இவ்வாறு நீ உதிர்க்கும்...
ஒவ்வொரு செயலும்,
எனக்கு ஆனந்தமே...

4 பின்னூட்டங்கள்:

Venky சொன்னது…

ஆனந்தம், பரமானந்தம்... மழலை என்றுமே ஆனந்தமே... அருமை...

வினோத்குமார் கோபால் சொன்னது…

உண்மை தான் நண்பா
உன்னுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

எஸ்.கே சொன்னது…

அருமையாக உள்ளது உங்கள் கவிதை வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

its very nice

கருத்துரையிடுக