7

கருவறைக் காதல்


இடர் கொண்டு ஈன்றாலும்,
இன்பம் என்றே எண்ணினாய்!

பசித்தாலும் புசிக்காமல்,
எந்தன் பசியாற்றினாய்!

துன்பங்களை மறைத்துவிட்டு,
இன்பத்தை மட்டுமே,
பகிர்ந்து கொண்டாய்!

அவ்வப்பொழுது அரவணைத்து,
மனதில் தேக்கி வைத்த,
அன்பையும் பொழிந்தாய்!

உனக்குள் கருவுற்ற என்னை,
உடலும் உயிரும் தந்து,
தனியனாய்... ஏன்,
பிரித்து வைத்தாய்?
5

அழகாக இருக்கிறாய்...உடைகள்
உன்னை விழுங்கிய பிறகும்
அழகாக இருக்கிறாய் பெண்ணே...

காரணம்?

நீ அழகா?
உந்தன் உடை அழகா?
உடை உடுத்தும் விதம் அழகா?
2

அழகாக...ஒரு நாள்,
கடற்கரை ஓரம்,
வந்து செல்லாமல்,
நின்ற அலையாய்,
நானும் அவளும்...
பார்வையால் மட்டும்,
காதல் செய்துகொண்டிருந்த நேரத்தில்,
"எது அழகு?" என்றாள்.

சிறு புன்னகையோடு,
"அழகு என்னும் வார்த்தைக்கு,
அர்த்தம் எதுவும் இல்லையடி...
மனதிற்கு பிடித்ததெல்லாம்,
அழகு என்றானதடி...", என்றேன்.

மீண்டும்...
"உங்களுக்கு எது அழகு?",
என்றாள்.

"அழகே என்னிடம்,
'எது அழகு?',
எனக் கேட்டால்,
பதில் ஏதும்,
சொல்லத் தோன்றுமோ?",
என்றேன் அழகாக...

படர்ந்தன வெட்கங்கள்,
மீண்டும் அழகாக...

மீட்க முடியாத அதிசயம்"எந்தன் நிழலில் உந்தன் உருவம்",
அழகான கவிதை என்றேன்...

"இதென்ன அதிசயம்?", என்றாய்...

"அடி பெண்ணே!
விண்ணில் உரைந்த,
மழைக் குவிலும்...
அதிசயம் இல்லை!
மண்ணில் புதையுண்டு,
மறைந்துள்ள மனமும்...
அதிசயம் இல்லை!
என்னோடு...
நீ இருக்கும்,
மீட்க முடியாத,
ஒவ்வொரு தருணமும்...",
அதிசயம் என்றேன்.
0

என்ன செய்யப் போகிறாய்?விழிகளுக்குள் மறைத்து வைத்த,
கருங் காந்தம் கொண்டு,
எந்தன் கண்களை எப்போதும்,
இடைவிடாது ஈர்த்துக் கொண்டிருக்கிறாய்...

ஈர்க்கப்பட்ட விழிகளைக் கொண்டு,
உந்தன் கண்களைத் தவிர,
எதையும் காண இயலாது,
மந்திரமும் செய்து விட்டாய்...

இன்னும்...
என்ன செய்யப் போகிறாய்?
0

தலைவன் வருவான்...


கயற் பிம்பங் கண்டு,
சிறகு விரித்ததோ கொக்கு?
கூந்தல் வாடையால் மயங்கி
நர்த்தனம் ஆடியதோ காற்று?
படர்ந்து கிடக்கும் கார் கூந்தலை
மழை மூட்டம் என்றெண்ணி
நாட்டியம் ஆடுதோ மயில்?
இவை யாவும் நிகழ்தள் அறியாது,
பசலை நோய் கொண்டு...
தலைவன் வருகையை எண்ணி,
காத்திருக்கிறாள் தலைவி...

(நன்றி : ப்ரியா இரங்கநாதன்)