3

கண் தானம்உன்னை பற்றிய எனது கவிதைகள்,
எத்தனை காலம் வாழும், என்று...
எனக்குத் தெரியவில்லை! பெண்ணே...

ஆனால்...
உன் கண்கள் பேசும்,
கவிதைகள் யாவும்,
பல நூறு காலங்கள்...
வாழ வேண்டும்!

ஆகையால்...
உந்தன் கண்களை,
தானம் செய்!
2

எது அழகு?விதவிதமாய் உடை அணிந்து,
"அழகாய் இருக்கிறதா?", என்கிறாய்.
"அழகாய் இருக்கிறது!", என்று
பொய் சொல்லவும் சொல்கிறாய்...

எத்தனை முறை தான்,
உன்னிடம் நான் சொல்வது,
"உடுத்தும் உடையை விட
நீ மிக அழகு", என்று...

மனம் முழு நிலவாய்...நீ...
இமை மூடும் போதெல்லாம்,
என் மனதில் ஏனோ,
இருள் சூழ்ந்து கொள்கிறது...

உன் பார்வையால்...
பிழைத்துக் கொண்டிருக்கும்,
என் மனதைக் கொல்லாதே...

சில காலம்...
சில்லறைச் சிரிப்போடு,
எந்தன் மனம்,
முழு நிலவாய், மிளிரட்டும்!
2

கனவுகளைக் கடனாய் கொடு...உன் கனவை எல்லாம்,
எனக்கு கடனாய் கொடுத்துவிடு...

உந்தன் அனைத்துக் கனவுகளிலும்,
எந்தன் அன்பை கொண்டு...
என்னையே நிரப்பித் தருகிறேன்,
அது காதலின் நினைவுகளாகட்டும்!