0

அனிச்சம்



தூரிகை கொண்டு தீட்டிய,
இருண்ட மேக வீதியில்,
புன்னகை பூக்கும் நிலவோ,
நின் குழல் ஏறிய,
வெண் நிறத்தில் தோய்ந்த,
நாணல் காணா அனிச்சம்?
0

என் அருகே நீ இருந்தால்...


எந்தன் அருகில்,
நீ இருந்தால்...
நான் பேசும்,
வார்த்தைகள் யாவும்,
கவிதைகளாம்...

என்னோடு,
நீ இருந்தால்...
நாம் வாழும்,
அழகிய வாழ்கை,
கவிதை புத்தகமாம்...
0

எந்தன் கண்ணில் உந்தன் அழகு...



உனக்கென்றே,
கண்ணாடிகள் பல இருந்தும்,
என் கண்களுக்குள்,
நீ விழுவதை மட்டும்,
பல காலம்
இரசித்து வந்தாய்...

பெண்ணே!
இவ்வாறு...
உன்னை நீயே
இரசித்து கொண்டால்...
நான்,
வேலையற்று போவேனே!
3

கடனாய் தருகிறேன்!


கண்களை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை நீயே பாரடி...
அழகாய் என்னை,
அழகால் கொல்லும்,
இன்பங்களை உணர்த்தும்...

இதயத்தை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை எண்ணிப் பாரடி...
நீ நாணும் வகையில்,
உன்னுடைய வருகையை,
கவிதையாய் படிக்கும்...

என்னை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
என்னை கொஞ்சம் பாரடி...
நீ கொஞ்சி விளையாட,
நீ விரும்பும் பொம்மையாய்,
நாணி நிற்கும்...
3

நிலைகொள்ளு மனமே...



பணம் என்னும் பேயும்
ஆசை என்னும் மிருகமும்
மரியாதை என்னும் அரக்கனும்
ஆட்கொண்ட மனித மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

பணப் பயனடைய...
அன்பையும் அரவணைப்பையும்,
தாயையும் தமிழையும்,
வீட்டையும் நாட்டையும்,
பிரியா மனதோடு,
அந்நிய நாட்டில்,
அடைகலம் புகுந்தனையே...
பகட்டு வாழ்கையை,
விரும்பிய மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

நாவோடு தேன்தமிழ்
பேசும் மனிதனையும்,
அனைவரின் அன்பையும்,
இல்லாத இட்டத்தே
தேடி அலையும்
ஒரு நிலையும்...
சென்ற இடத்தில்
எடுத்த செயலை
செவ்வனே செய்ய
எண்ணும்
மறு நிலையும்...
ஏற்று தவிக்கும்
மனித மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

நம் நாடு
உன்னை அழைப்பதை
கேள் தமிழா...
அன்பு அரவணைப்பும்
உன்னை அழைப்பதை
கேள் மனிதா...
தேன்தமிழ் வார்த்தைகளை
செவியோடு ருசிக்க
வா புதல்வா...
4

காலங்களில் அவள்...



புதியதோர் உலகை
உனை கொண்டு
காண கிடைத்த
அழும் குரலால்
எனை அழைக்கும்
பெண்ணே...
இவ்வுலகிற்கு
இது தான் உந்தன்
முதற் காலம்...

அழு குரல் மறந்து
முதன் முதலாய் எனை
அம்ம்ம்மமா... என்றாய்
இது தான் உந்தன்
மழலை காலம்...

தத்தி தத்தி
நடை பழகி
எழுந்து வந்து
எனை அணைத்தாய்
இது தான் உந்தன்
பிஞ்சு பருவ காலம்...

ஏதேதோ உளறியே
ஏதும் புரியாமல்
பள்ளிப் பாடங்களை
மனதினுள்
புகுத்திக் கொண்டாய்
இது தான் உந்தன்
கற்றல் காலம்...

மொட்டாய்...
மணம் வீசி
உறவுகளின் மனங்களை
கொள்ளை கொண்டு
திரிந்து மலர்ந்தாய்
இது தான் உந்தன்
பருவ காலம்...

தாய் தந்தையர்
பாசத்திற்கு இணையாக
உனை ஈர்க்கும்
அன்பிற்கு அடிபணிவாய்
இது தான் உந்தன்
நட்பு காலம்...

பெற்றவர் உற்றவர்
அனைவரையும் பிரிந்து
உந்தனுக்காக மலர்ந்தவனுடன்
கூடலும் ஊடலும் கொள்ள
தனித்து செல்வாய்
இது தான் உந்தன்
திருமண காலம்...

பிறந்த பயன்
முழுதும் பெறவே
கருவறையில்...
பிள்ளை ஏந்தி
உயிர் கொடுக்க காத்திருப்பாய்
இது தான் உந்தன்
தாய் கோலம்...

இங்ஙனம்,
உனை பெற்ற பேதை

இப்படிக்கு பசுமை - 3



பசும் பிடரியுதிர்த்த
பனையும் தென்னையும்,
தோல்கள் இழந்து
நரம்புகளாய் தோன்றும்
வேம்பும் மாமரமும்,
இளம் பச்சை ஆடையை
துறந்து அசையாது நிற்கும்
புற்களும் பயிர்களும்,
விடியலில்...
வெயில் கொடுமை தாங்காது
குடையேந்தும் மனித உயிர்களும்,
எந்தன் உயிர் தழைக்க
மழையை வேண்டி காத்திருக்கும்...

இப்படிக்கு,
பசுமை
2

இப்படிக்கு பசுமை - 2



பூக்கள் யாவும்
மலராது, பொய்த்து,
மடிந்து போகும்...

பயிர்கள் யாவும்
நாணல் காணாது,
அறுவடை சேராது,
காய்ந்து போகும்...

வற்றா நெய்தலும்,
நீர் காய்த்து...
பாலை நிலமாய்,
மாற்றமும் காணும்...

மனிதா...
இந்நிலை வாய்க்கும் காலம்
வெகு தூரம் இல்லை...
நின் துயர் கண்டு,
நான் வருந்தி
மடியும் காலமும்
தொலைவில் இல்லை...

இப்படிக்கு,
பசுமை