காகிதப் பேய்...


உன்னைச் சுற்றி,
கொட்டிக் கிடக்கும்,
எண் கொண்டு...
அச்சிட்ட காகிதங்களை,
சேகரித்தே வாழ்க்கையை,
இடுகாட்டில் தொலைக்கிறாய்...

பணம் என்னும்,
மாய வலையின்,
உடும்பு பிடியிலிருந்து,
நீங்க மறுக்கிறாய்...

இன்னும்,
எதை தேடி பயணிக்கிறாய்?

பணம் என்னும்,
அடைப்புக் குறியில் சிக்கி,
தனித்து நிற்கும் மனிதா...
வாழ்க்கையின் முற்று புள்ளியை,
அடையும் முன்னமே...
அன்பால் அழகாக மிளிரும்,
ஆச்சரியக் குறியை அடைந்து,
வாழ்க்கையை தெளிவான,
கவிதையாக மாற்று!

மழை இல்லாமல் நனைகிறேன்!


பேசும் மழலை மொழியையும்,
செய்யும் அழகான குறும்பையும்,
தத்தித் தவழும் நடையையும்,
கை தட்டி சிரிப்பதையும்,
புன்னகையோடு கண் சிமிட்டுவதையும்...
பார்த்து பார்த்து இரசித்து,
நீ பொழியும்,
உன்னுடைய அன்பால்...
மழை வரும் முன்னமே,
ஆனந்தமாய் நனைகிறேனே!
0

உன்னாலே... உன்னாலே...


விரல்களின் நுனியில்,
எண்ணற்ற வண்ணங்கள் வழிகிறது!
விழிகளின் வழியே,
ஒளிக் கீற்றுகள் தெரிக்கிறது!
செவிகளின் ஓரம்,
இசைச் சங்கமங்கள் நிகழ்கிறது!
கடலலை யாவும்,
கால்களை முத்தமிட்டு செல்கிறது!
இந்த மாற்றங்கள் எல்லாம்...
உன்னாலே நடக்கிறது!