5

இயற்கைச் சீற்றங்கள்


உன் பார்வை பட்டு,
பூக்கள் எல்லாம் உதிரும்...
உன் இடை வளைவுகளில்,
செடி கொடிகள் படரும்...
வானத்திலிருந்து கிளம்பிய,
மழைத் துளிகளும்,
மண்ணைச் சேராமல்,
உன்னையே சுற்றி வட்டமிடும்...
சின்னச் சின்ன நட்சத்திரங்களும்,
அழகிய வெள்ளை நிலவும்,
விண் திரைக்குள் மறையும்...
உன்னுடைய மேனிக் குளிர்வை,
சற்றும் தாங்க இயலாமல்,
சூரியனும் போர்வைகுள் நுழையும்...
இந்த இயற்கைச் சீற்றங்கள்,
உன்னால் மட்டுமே நிகழும்!

ஆகையால் பெண்ணே,
வெளியில் எங்கும் அலையாமல்,
என்னுடைய மனதிற்குள்,
நிலையாய் தங்கிவிடு...
அந்த சீற்றங்களை எல்லாம்,
என்னுடைய மனது மட்டுமே,
சுகமாய் தாங்கிக் கொள்ளும்!

இன்னிசை விருதுகள்...


உன் விழி இமையில்,
படர்ந்துள்ள கருந்தோகைகள்,
என் உதடு பட்டு,
இசைக்கீற்றுகளை விரிப்பது...
நம் காதுகளுக்கு மட்டும்,
எப்பொழுதும் கேட்கிறது...
அந்த இசைக்கு வேறேதும்,
இணையில்லை என,
இயற்கையின் இன்னிசை விருதுகள்,
பல காத்துக்கிடக்கின்றன!

முத்தமாய் பனி மழை!


நெற்றி முட்டி,
கன்னங்கள் தேய்த்து,
ஒரு துளி முத்தமும்...
சிறு பார்வையோடும்,
அழகிய புன்னகையோடும்,
ஒரு சின்ன வெட்கமும்...
கைகளை பிடித்து,
நெற்றிப்பொட்டில் வைத்து,
சில அன்பான வார்த்தைகளும்...
நான் கேட்கும் பொழுது,
புன்னகையோடு வெட்கத்தையும்,
அன்பான வார்த்தைகளையும்,
உடனே தந்துவிட்டு...
முத்தத்தை மட்டும்,
கடன் வைக்கிறாய்...

கடனை எல்லாம்,
கொஞ்சம் கொஞ்சமாய்,
அவ்வப்பொழுது தந்துவிடு,
முத்தத்தின் பனி மழையில்,
மொத்தமாய் நனைந்து,
என்னையும் நனைத்துவிடாதே!