மழை நின்றும் நனைகிறாய்!


மழை நின்ற போது,
என் சட்டைக்குள்,
முகம் புதைத்து...
என் நெஞ்சில்,
உன்னுடைய நினைவுகளின்,
அன்புத் தூரல்களில்,
அழகாய் நனைகிறாய்!

அடி பெண்ணே,
இது என்ன விளையாட்டு?
3

பூக்களுக்கு பிறந்தநாள்!


உன் உதடுபட்டு,
விரியும் பூக்கள் எல்லாம்,
இயற்கையாய் மலரவில்லை...
வெட்கம் தாங்காமல் வெடிக்கின்றது!

என் உதடுகளும்,
நாணல் கொண்டு,
அழகாய் வெடிக்க,
காத்துக் கிடக்கின்றது!
4

விழிச்சிறையில்...


கவிஞர்களின் கவிதையிலும்,
ஓவியனின் தூரிகையிலும்,
சிற்பியின் உளியிலும்,
அடங்க மறுக்கும்...
அமைதி என்னும்,
அணிகலன் கொண்ட,
அழகிய பெண்ணே!
என் கண்களுக்குள் மட்டும்,
எவ்வாறு சிறைபட்டு இருக்கிறாய்?
0

யாரும் அரியாத உண்மை...


நட்சத்திரங்கள் ஒன்று கூடி,
விரிக்கும் வெள்ளைக் கீற்றுகளின்,
அழகிய கூட்டத்தில் இருந்து,
வருபவள் தேவதை என்றால்...
உன் பெயர் என்ன?

வண்ணங்கள் பல பெற்று,
வரையப்பட்ட பெண் ஓவியத்தில்,
இருப்பவள் அழகி என்கிறார்கள்...
அப்படியெனில் நீ யார்?

பெண்ணே, நீ...
தேவதைகளின் தேவதை என்பதும்,
அழகிகளின் அரசி என்பதும்,
யாரும் அரியாத உண்மையடி!
0

வெள்ளை நிறக் காதல்கள்!


பெண்ணே,
நீ எந்தன் வானம்!
உன்னுடைய விழிகள்,
அதிகாலை சூரியன்கள்!

ஆகையால்...
மேல் இமையும், கீழ் இமையும்,
சேரும் ஒவ்வொரு கனமும்...
எனக்கு ஆயிரம் இரவுகள்!

அந்த இரவுகளின் நிலவாய்,
உன் முகம் பொழிவதெலாம்...
அமைதியை பெருக்கும்,
அன்புகள் நிறைந்த,
வெள்ளை நிறக் காதல்கள்!