இனிமை

நிறமற்ற நீரும் உருமாறி
கருநிறம் கொண்டது

நிலாப் பெண் சிரிப்பினிலே
மேகங்கள் நாணமுற்று
கருத்துப் போனது

நிலவழகால் ஈர்க்கக் கண்டு
நிழலாடச் செய்து
நீரும் சலனப்பட்டது

மேகக் கருஞ் சாந்தை
மரமேனோ கடன் வாங்கி
மேனி கருத்து
உயிரற்று நிற்கிறது

தலையை இடைச் செருகிய
கால்களை அணைத்தபடி
கைகள் கோர்த்தமர்ந்தவாறு
நின் நினைவுகளோடு
நீரின் சலனத்தை கலைத்தபடி
மெளனமாய் நானிருந்து
நல்லிரவைக் கழிக்க வேண்டும்

என் துணையென
நீயில்லா இரவினிலே...

சில நேரம் பிரிவும்
இனிமை தான் பெண்ணே...

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

indha kavidhaiyai varnika naan seidha varthai thedal payanatru ponadhu !! gr8 wrk !

வினோத் குமார் கோபால் said...

தனிமையில் காணும் பொருளெல்லாம் அவள் பிம்பம்

நன்றி

Post a Comment