காதல் கடிதம்


உன்னோடு பேசினேன்,
உன்னோடு பழகினேன்,
என்னோடு
உன்னை வைத்து,
ஓயாமல் பார்த்தேன்...
நேற்று வரை,
எந்தன் மனதோடும்,
உந்தன் நிழற்படத்தோடும்...

உன்னோடு பேச வேண்டும்,
உன்னோடு பழக வேண்டும்,
என் அருகில் உனை வைத்து,
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்...
இன்று முதல்,
என்றென்றும் உன்னோடும்,
உந்தன் மனதோடும்...

இவ்வாறு எண்ணியே
பல இன்று நேற்றாக மாறி
காற்றோடு கவிதையாய்
மறைந்தே போனதே...

ஆனால்...
இந்த இன்று மட்டும்,
இதற்கு விதிவிலக்கு...
ஏனென்றால் இக்கடிதம்,
உன்னிடம் வந்துவிட்டதே...

நான் உன்னை காதலிக்கிறேன்...

3 பின்னூட்டங்கள்:

Venky said...

வித்யாசமான காதல் கடிதம்... நல்ல இருக்கு...

Lakshmikasi said...

nice lines.......realy superb....பல இன்று நேற்றாக மாறி
காற்றோடு கவிதையாய்
மறைந்தே போனதே

Sathya said...

good one! :)

Post a Comment