விழியோடு நீர் கண்டேன் - அவள்
கண்கள் துடிக்கக் கண்டேன்!
மெளனத்தின் மொழியறிந்தவள்
என்பதையும் கண்டேன்!
பேதையவள் வாய் மூடி
கை பேசும் வித்தைக் கண்டேன்!
அக்கனம் விழியிரண்டும்
இமைத் தோகை விரிக்கக் கண்டேன்!
பாவம் என்னச் செய்தனளோ?
செவ்விதழ் விரித்து சொல்லொன்று
மொட்டுவிட வழியில்லை...
நின் நீர் தாங்க என் கைகள்
மறுக்கவில்லை...
எந்தன் அன்புத் தோழி
நீ ஊமையென்று ஊர் ஏசும்
ஆனால் அவர்களுக்குத் தெரியாது
இரு விழியும் ஈரைந்து விரலும்
பிறரறியா மெளனம் பேசுமென்று
பெண்ணே ஊனம் உன்னிடமில்லை
உனையேசும் ஊரிடமே
5 பின்னூட்டங்கள்:
really u great vinoth... al lines r very superb.... u ve a god's blessin..
really superb sir....
great lines....quite intriguing....
"பெண்ணே ஊனம் உன்னிடமில்லை
உனையேசும் ஊரிடமே"
its true vinoth
அருமையான கவிதை. கொஞ்சம் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.
கருத்துரையிடுக