தாய்

விதையாய் விழுந்த எனை
உன்னில் புதையலாய் இட்டாய்

விதையதனில் துளிர் தெரிக்க
உதிரம் உருக்கி உரமாய்
எந்தனில் உயிர் ஊற்றினாய்

திங்கள் பத்து களைய
நின் வயிற்றுத் தொட்டிலெனும்
ஊஞ்சலில் எனை இட்டாய்

பெண் எனும் போர்வைக்குள்
சேய் பின்பு தாரமாகி
என்னுடையத் தாய் ஆனாய்

உன்னை பற்றி எண்ணியே
வியப்புற்றேன் என் தாயே

4 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Pennnin perumaiyai alagaana varthaigalil solli irukeerkal

Unknown சொன்னது…

arrumaiyaga eruthanthu annal ennaku oru santhegam 1 variiyil.ettan ethai kuriknrethu

வினோத்குமார் கோபால் சொன்னது…

விதையாய் விழுந்து எனை
உன்னில் புதையலாய் இட்டேன்

இது கருவை குறிக்கிறது தோழி அனுசா

அர்னி மற்றும் அனுசா, இருவரும் நன்றி

Unknown சொன்னது…

ingu karuvil ittavalum thaaithaane? piragu itten ethaik
kurikkirathu?

கருத்துரையிடுக