நீ தான் நான் என்றேன்...
மேகத்தை கேட்டாய்...
அதனை உறுக்கி,
மழையாய் தந்தேன்!
முத்தம் ஒன்று,
கடனாய் கேட்டாய்...
மொத்தமாய் தந்துவிட்டேன்!
புத்தகம் ஒன்று கேட்டாய்...
பற்பல கவிதைகள் தந்தேன்!
கண்களை இரண்டையும் கேட்டாய்...
கனவுகள் அனைத்தையும் தந்தேன்!
எந்தன் இதயத்தை,
களவாட வேண்டும் என்றாய்...
மலர்ந்த காதலை மலராய் தந்தேன்!
வேறென்ன வேண்டுமென்று,
நானே கேட்டுவிட்டேன்...
என்னையே வேண்டுமென்றாய்,
நீ தான் நான் என்றேன்...
நானும் கவிஞன்...
பூக்களும் சிரிக்கும் என்று
அறியாது இருந்து விட்டேன்...
நின் புன்னகை மலர்ந்ததில்
அதனை உணர்ந்து கொண்டேன்!
கருஞ்சாந்தாய் நீர்வீழ்ச்சி
இருந்ததும் அறியவில்லை...
நின் கார்குழலை
வருடும் வரை!
கால்களுக்கும் ஈர்ப்பு விசை
இருக்கும் என்று தெரியவில்லை...
நான் உன்னை நோக்கி
விரைவாக நடக்கும் வரை!
உறக்கத்தையும் சிறை பிடிப்பாய்
என்று ஒருபோதும் அறியவில்லை...
எந்தன் கனவுகளில்
நீ நிறையும் வரை!
நானும் கவிஞன் என்று
நானே நம்பவில்லை...
இந்த கவிதையை
எழுதும் வரை!!!
விழியீர்ப்பு விசை
உன்னை கடந்து,
போகும் போது...
நின் விழிகளை,
இமை இரண்டினுள்,
சிறிது நேரம்,
சிறையிடு பெண்ணே!
இத்தனை நாட்கள்,
நாம் நடத்தும்,
விழியீர்ப்பு போராட்டம்,
முடிவுக்கு வரட்டும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)