தேனாய் ஊறியதே

அமுதாய் பொழியும்
அன்பின் நினைவால்
ஐவிரலில் தாழ்ந்தவனின்
தலையின் உச்சத்தில்
கருவிற் குயிரூற்றிய
தாயின் ஞாபகமெலாம்
உணவாய் ஏற்றி
வாயதனில் இட்டேன்
இட்டதெலாம் குழைந்து
தேனாய் ஊறியதே

4 பின்னூட்டங்கள்:

காயத்ரி சொன்னது…

மிகவும் அருமையான வரிகள்!

வினோத்குமார் கோபால் சொன்னது…

கேட்காமல் கருத்து கூறும் தோழி காயத்ரி அவர்களுக்கு எனது நன்றிகள் மனதோடு கூடை கூடையாய்

Unknown சொன்னது…

thaayin nyabagam endram thevittatha thenamudhey...beautif. imag....v. good!

வினோத்குமார் கோபால் சொன்னது…

வாழ்க்கை படகில் தூண்டிலாய் திகழும் தாயின் அன்பும் பரிவும் என்றென்றும் எனதுயிரோடு கலந்தேயிருக்கும்

நன்றி சுவாதி

கருத்துரையிடுக