
உன் பார்வை பட்டு,
பூக்கள் எல்லாம் உதிரும்...
உன் இடை வளைவுகளில்,
செடி கொடிகள் படரும்...
வானத்திலிருந்து கிளம்பிய,
மழைத் துளிகளும்,
மண்ணைச் சேராமல்,
உன்னையே சுற்றி வட்டமிடும்...
சின்னச் சின்ன நட்சத்திரங்களும்,
அழகிய வெள்ளை நிலவும்,
விண் திரைக்குள் மறையும்...
உன்னுடைய மேனிக் குளிர்வை,
சற்றும் தாங்க இயலாமல்,
சூரியனும் போர்வைகுள் நுழையும்...
இந்த இயற்கைச் சீற்றங்கள்,
உன்னால் மட்டுமே நிகழும்!
ஆகையால் பெண்ணே,
வெளியில் எங்கும் அலையாமல்,
என்னுடைய மனதிற்குள்,
நிலையாய் தங்கிவிடு...
அந்த சீற்றங்களை எல்லாம்,
என்னுடைய மனது மட்டுமே,
சுகமாய் தாங்கிக் கொள்ளும்!