5

ஊமை

விழியோடு நீர் கண்டேன் - அவள்
கண்கள் துடிக்கக் கண்டேன்!

மெளனத்தின் மொழியறிந்தவள்
என்பதையும் கண்டேன்!

பேதையவள் வாய் மூடி
கை பேசும் வித்தைக் கண்டேன்!

அக்கனம் விழியிரண்டும்
இமைத் தோகை விரிக்கக் கண்டேன்!

பாவம் என்னச் செய்தனளோ?
செவ்விதழ் விரித்து சொல்லொன்று
மொட்டுவிட வழியில்லை...
நின் நீர் தாங்க என் கைகள்
மறுக்கவில்லை...
எந்தன் அன்புத் தோழி
நீ ஊமையென்று ஊர் ஏசும்
ஆனால் அவர்களுக்குத் தெரியாது
இரு விழியும் ஈரைந்து விரலும்
பிறரறியா மெளனம் பேசுமென்று
பெண்ணே ஊனம் உன்னிடமில்லை
உனையேசும் ஊரிடமே
2

கனவு

உன் மனம் உனையறியாமல்
உறக்கத்தில் களவு போகும்!
உடலைவிட்டு உயிர் பிரித்து
நினைவுகளோடு ஓடிப்போகும்!
வேற்றுலகம் சென்று சேர்ந்து
நினைவுகள் யாவும்
மேடை போடும்!
இவையாவும் கனவுகளாய்
நீ காணக்கூடும்!
2

கண்ணீர்

நடை பழகிய
முதிர்ந்த குழந்தை
தளர்ந்த உடலுக்கு
தாங்குதல் தேடுதடா!
ஊன்று கோல் உதவியது
உன்னைத் தேடிய
குழந்தைக்கு...

உன்னைத் தேடிய
குழந்தைக்கு,
தேடியது கிடைக்கவில்லை
விழி நீர் தெரிப்பும்
நிற்கவில்லை.
2

உயிர்

நிழலாய் மாறி
கால் சேர்ந்து
நின் பாதையில்
நான் உருள்வேன்!
பெண்ணே நீ...
நிழலுக்கு உயிரில்லை
என்றாலே
உடனே நானும்
உயிர் பிரிவேன்
2

மருதாணி

நிந்தன் விரல்களும்
நாணமுற்றுச்
சிவந்து போனதோ?
இல்லையடி...
உள்ளங்கை நிலவின்று
ஐஞ்சுடர்த் தெரிக்கும்
சிவந்தச் சூரியனாய்
சுடர்விட எண்ணியே
இலை தானுதிர்ந்து
விரல்களுக்கு சாறூற்றி
காய்ந்துதிர்நதுச் சிரித்ததடி
மருதாணி
4

குழந்தை

நின் கூண்டிற்குள்
மாதங்கள் பத்து
எனைச் சிறை வைத்து
உனைப் பிரித்து
எந்தன் உயிர் தரிக்க
நீ துடித்தாய்!

எனைச் சிற்பமாக்க
நீ தேய்ந்து
சிறிது சிறிதாய்
பழுத்துவிட்டாய்.

எமன் எனையழைத்தாலும்
என்னுயிர் விட்டு
உடல் கொண்டு செல்லட்டும்
ஏனெனில்
என்னுயிர் கூட்டில்
முதிர்ந்த குழந்தை தான்
நீ எனக்கு?

முதல் கவிதை

கவிதைகள் பல
கேட்டினும் அறிந்திலேன்
இத்தகு இனிமை
மழலையின்
புதுக்கவிதை...

நான் இரசித்த
முதல் கவிதை...