நான் என்றும் ஒற்றையனாய்
கரையோரம் மணல் மிதித்து
பாதம் குழியிட்டுச் சென்று
கடக்கும் வினாடி ஒவ்வொன்றும்
பாதம் பரைத்தக் குழியதனில்
நின்னைக் காணாத வலியதனை
ஒன்றாய் சேர்த்து சுவடுகளாய்
புதைத்து விட்டுச் செல்லும்
பேதை குணம் பாராட்டும்
உயிரற்ற என் மனது
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
2 பின்னூட்டங்கள்:
உணர்வுப்பூர்வமான அழகிய கவிதை!
எந்தன் கவிதைக்கு அழகு சேர்த்த உங்கள் வர்ணனைக்கு நன்றி காயத்ரிதேவி
கருத்துரையிடுக