மனதோடு வேர்விட்ட துயரம்
மரமாய் வளர்ந்து விழியோரம்
மரக்கிளை இலை யமர்ந்த
நிறமற்ற பனித் துளியாய்
கண்ணீர் வார்க்கும் தருணம்
மழையெனும் என் தோழன்
தொங்கற் நீர் தெரிப்பதற்குள்
விண் வேய்ந்த கூரையகற்றி
உப்பு நீரோடு உறவாடுவான்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
3 பின்னூட்டங்கள்:
Mazhayil nanaivathu inbam... ungal kavithaiyai padipathu perinbam.... alagana varigaluku sonthamana ungaluku ... valthukal...
நன்றி அர்னிதா!!!
உங்கள் அழகான வர்ணனையை கேட்பதும் இன்பம் தான்
மிகவும் அழகிய கவிதை!பாராட்டுக்கள்!
கருத்துரையிடுக