ஈன்றெடுத்து எனை வளர்த்து
கண்டடைந்த சுகம் யாவும்
என்னைப் பொருத்த மட்டில்
ஏதுமில்லை என அறிவேன்
எனையே நான் உணரும்
காலம் கடக்கும் வரை
உன்னுடனே நின் விழிதனில்
மணியெனப் பொதித்துக் கொண்டாய்
உறுத்தலெனும் வலி கண்டும்
எனக்காகப் பொருத்துக் கொண்டாய்
நீயடைந்த இடர் யாவும்
சொல்லாமல் நானறிவேன்
துயர் யாவும் களைந்திடவே
பெற்ற செல்வன் பொறுப்புணர்நதேன்
இன்று முதல் சேயாகி
கண்மணியாய் நீ இருப்பாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 பின்னூட்டங்கள்:
This must one of your bests'. In a very simple language this poem is excellent.
கீதாவின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி
Thayin anbirku alave ila..athe pola .. antha anbe pathi eluthum ungal kavithaikum alave ilai!!!!!!!!
kannin maniyagi kavithayin ovvoru varithagalum manithuligal.
intha kavithai padikkum pozhuthu ennaku thonriyathu kan = thay
mani(kannul irrukum karuppu papa)=seiy
erendum pirithal porul illai erattai kilavi pol. nice kavithai n simple words. congrats
தோழி அர்னிதா மற்றும் அனுசா ஆகிய இருவருக்கும் எனது நன்றிகள் உங்களோடு இருக்கட்டும்
கருத்துரையிடுக