நூலிழை அளவு வெட்கம் போதும்
நூலிழை அளவு தான்,
நிந்தன் வெட்கம் என்றாலும்...
போதும், போதும்
என்றது என் மனது.
பாவம்!
அவனுக்கு எப்படி தெரியும்?
நின் வெட்கத்தின் விலை,
மதிப்புகள் அற்றது என்று!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
6 பின்னூட்டங்கள்:
simplyt superb dear..
Super friend
நிந்தன் வெட்கத்தை கண்டவுடன் என்னுள்
ஏவுகணைகள் ஏராளம் .. என் மேனியில்
நாடி நரம்புகள் போர் பரணி பாடும் ..என்
கண்விழியோ கோடி முறை படபடக்கும்..
வெள்ளரி பிஞ்சாய்அவள் எனக்குள் வெடிகிடங்கை
பற்ற வைத்தாள்..அமைதி பேரணி கண்ட என்
உடம்பை ஈழ போர் போல் இரு பக்கம் நெளிய வைத்தாள்..
நூலிழை அளவு தான் நிந்தன் வெட்கம்..
எனக்கா தெரியாது ? அதன் மதிப்பு..
வெட்கம் வந்த இடம் ஏது என தெரிந்தேன்..
சேயிழை கண்ணில் வெட்கம் என்றால்
செம்பரல் மாணிக்கம் நூறு தரலாம்..
செழுங்கன்னி கன்னத்தில் வெட்கம் என்றால்
கொற்கை முத்து பரல்கள் ஆயிரம் தரலாம்.
தேனுதடு சுளையில் வெட்கம் என்றால்
வாழை குருத்தவளே .. வைரமாய் கோடி தரலாம்..
பால் வண்ண மேனியில் வெட்கம் என்றால்
அய்யகோ ..வையகத்தையே தரலாமடி..
enna solla......
vazhka tamizh......
vetkame nee engalai
venruvittai....
நூலிழை அளவு தான் நிந்தன் வெட்கம் என்றாலும்
மாவிலை தான் சிவந்து போனதடீ.- மயிலே.
மல்லிகையும் சிவந்ததடி - கான கருங் குயிலே ...
எந்தன் எழும் இச்சை கண்டு எலுமிட்சை பழுத்ததடி..
என்னவளே......இனியும் நீ வெட்கப்பட்டால்
தேங்காய் பழுக்குமடி .. தெருவோரம் இருக்கும்
கிழவிக்கும் ஆசை வருமடீ..
கருத்துரையிடுக