ஏனடி மலர்ந்தாய்?



மனத்திலும் குணத்திலும்
மென்மை கொண்ட
மேன்மையான மல்லிகையே
ஏனடி மலர்ந்தாய்?

என்னவள் விழிக்கும் காலம்
இன்னும் வரவில்லையே,
ஏனடி மலர்ந்தாய்?

அவள் பார்வை
உன்னை வருடி
மலர வேண்டிய மல்லிகையே
ஏனடி மலர்ந்தாய்?

தன் விரல் மொட்டுக்களால்
உன்னை வருட காத்திருக்கிறாள்
ஏனடி மலர்ந்தாய்?

வெண்மையை இரசித்து
அவள் நின்னை
இன்னும் முத்தமிடவில்லை
அதற்குள்ளாக
ஏனடி மலர்ந்தாய்?

என்னவள் கூந்தலுக்கு
வாடை வழங்கும் முன்னமே
ஏனடி மலர்ந்தாய்?

நீ
சுயநலம் கொண்டு
மலர்ந்தமையால்
நான் படும் பாடு
அறியமாட்டாய்...

மலர்ந்த மல்லிகையே
நீயுதிர்த்த வாடை
எந்தன் மனதை
இதமாய் வருடாமல்
சற்றே வருத்தியது...

9 பின்னூட்டங்கள்:

Deepa சொன்னது…

Perfect!!!Nice one.. :)

Unknown சொன்னது…

dai dai...

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி தீபா...

ஆதி நண்பா, ஒரு அழகான கவிதை எழுதினா உங்களுக்கெல்லாம் பொறுக்கதே...

பெயரில்லா சொன்னது…

that great. I expected the ending to be even more sentimental though.

~Anamika

வினோத்குமார் கோபால் சொன்னது…

@அனாமிகா...

இதமாய் இருக்க வேண்டிய மல்லிகையின் மனம் சற்றே வருத்தியதாய் ஒரு ஒப்பனை...

இது நல்லா இல்லையா???

Unknown சொன்னது…

Nice

CHARLES சொன்னது…

hi anna,,,,,,,,,,,,
nice ur kavithai

Jaikumar சொன்னது…

nice... touching end...

தேவதை காதலன் சொன்னது…

super...

கருத்துரையிடுக