பேருந்தில் நீ எனக்கு...



என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

பேருந்து பயணத்தில்...
சன்னல் ஓரத்தில் அமர்ந்து,
காதுகளுக்கு இனிமையாய்,
இசை பகிர்ந்து கொண்டிருந்தேன்...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

போகும் இடம் அறிந்தும்,
நீ இறங்கிய,
பேருந்து நிறுத்தத்தில்...
என்னையும் இறக்கியது,
உன் சிரிப்பு...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

இசை மழை இருந்தும்...
நனையாது, இருக்கச் செய்த,
உந்தன் பார்வையும் சிரிப்பும்,
ஈர்த்துக் கொண்டே இருந்ததே...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

அன்று முதல்
ஒவ்வொரு
பேருந்து பயணத்திலும்
உந்தன் வருகைக்காக
காத்திருந்தேன்

பல நாள் தவத்தின்
பெரும் பயனாக
மீண்டும் வந்தாய்
அருகில் அமர்ந்தாய்

என்னை பார்த்து,
அன்றும் ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

4 பின்னூட்டங்கள்:

Venky சொன்னது…

வாழ்க்கைப்பயணத்தில், அழகாய் சிறிதவள், நீ இறங்கும் இடம் வரை துணை வர வாழ்த்துக்கள் :)

எஸ்.கே சொன்னது…

நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

சரண்யா சொன்னது…

உன்னை பார்க்கும்
அந்த ஒரு நொடியில் தான்
உலகின் ஒட்டு மொத மகிழ்வும் என்னில் குடி கொள்கின்றன................
அந்த ஜன்னலோர இருக்கையில்
உன்னருகில் அமர்ந்து
உன் கைகளோடு சேர துடிக்கும்
என் ஐந்து விரல்களில் எப்பொழுது பதிக்க போகிறாய்
உன் கை ரேகைகளை ???????????????

பெயரில்லா சொன்னது…

nice!!!!!!!!!

கருத்துரையிடுக