காகிதப் பேய்...


உன்னைச் சுற்றி,
கொட்டிக் கிடக்கும்,
எண் கொண்டு...
அச்சிட்ட காகிதங்களை,
சேகரித்தே வாழ்க்கையை,
இடுகாட்டில் தொலைக்கிறாய்...

பணம் என்னும்,
மாய வலையின்,
உடும்பு பிடியிலிருந்து,
நீங்க மறுக்கிறாய்...

இன்னும்,
எதை தேடி பயணிக்கிறாய்?

பணம் என்னும்,
அடைப்புக் குறியில் சிக்கி,
தனித்து நிற்கும் மனிதா...
வாழ்க்கையின் முற்று புள்ளியை,
அடையும் முன்னமே...
அன்பால் அழகாக மிளிரும்,
ஆச்சரியக் குறியை அடைந்து,
வாழ்க்கையை தெளிவான,
கவிதையாக மாற்று!

1 பின்னூட்டங்கள்:

தோழி சொன்னது…

நல்ல கவிதையும் அதற்க்கு பொருத்தமான சிறந்த படத் தெரிவும்..

கருத்துரையிடுக