அழகான பொய்கள்!
பூமி தொட விழையும் மழையின்,
நீர்த் துளிகள் என்னை தொடாமல்,
சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய்!
வெடிக்கும் இடி முழக்கம்,
என் காதுகளில் எட்டாமல்,
மார்போடு இருக்க அணைத்தாய்!
புன்னகையால் படம் எடுக்கும் மின்னலுக்கு,
முகம் காட்ட வேண்டாம் என்று,
என் கண்களையும் கைகளால் மூடினாய்!
இதனால்...
என்னை தூரலாய் தொட வந்த மழையும்,
எனக்காக இசை மீட்டி தந்த இடியும்,
என்னை படம் பிடிக்க வந்த மின்னலும்,
உன்னை பார்த்து பொறாமை பட்டதாய்...
ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழகாக,
என்னிடம் எதற்காக பொய் சொல்கிறாய்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 பின்னூட்டங்கள்:
அருமை...
முரன்பாடான பொய்யை பாதுகாப்புக்கு சொன்னால்..காலம் தள்ளி சிந்தித்த சிசு பாசத்தோடு வினாவா...! அழகிய கவிதை...அருமை
பொய்யும் அழகு!!!
கருத்துரையிடுக