சிறுபிள்ளையாய் செய்வாயா?
இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?
இறைவா...
அன்பாலே உலகம் செய்து,
அழகான உறவுகளும் செய்தாய்!
உயிர்களை பிறக்கச் செய்து,
அதனை உடலுக்குள் புகவும் செய்து,
இறப்பையும் அறிய செய்தாய்!
மலருக்கு வாடை தந்து,
மலரும் வினை செய்தாய்!
சரிகம இசை தந்து,
அதனை காற்றினில் ஒலியாகச் செய்தாய்!
ஒலியை உணரச் செய்து,
மொழியை பிறக்கவும் செய்தாய்!
சூரிய குடும்பம் படைத்து,
அதனுடன் நிலவும் படைத்து,
ஒளியை எங்கும் படரச் செய்தாய்!
இரவு பகல் மாறுதலின்...
பாகுபாட்டையும் உணரச் செய்தாய்!
இறைவா...
இவை அனைத்தையும் செய்யச் சொல்லி,
உன்னை செய்து அனுப்பியவன் யாரைய்யா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)