0

என்றென்றும் மழைக் காலம்!


மனதிற்குள்...
ஆயிரம் ஆயிரம்,
உணர்வுக் கூட்டங்களால்...
என்றும் ஓயாது,
ஈரத்துடன் தெரிக்கப்படும்,
அன்புத் துளிகளும்...
மழை தான்!

ஆகையால்...
என் மனக் கூண்டில்,
என்றென்றும் மழைக் காலம்!
0

இவளும் ஒரு தேவதை...


இவள்...
கண்களுக்கு புலப்படாது,
விண்ணுலகில் திரியும்,
மாயமாய் மறையும்,
தேவதை இல்லை...

என் மனதிற்குள்,
என்றும் திரியும்,
அன்பை மட்டுமே,
என்னுடன் பகிரும்,
அம்மா என்னும்,
அழகிய தேவதை!
0

முத்தத்தால் என்னை மூழ்கடித்தாய்...


மொத்தமாய் வந்து,
முத்தத்தால் மூழ்கடித்தால்,
மூர்ச்சையாகிப் போவேன்,
என்று எண்ணியே...
மழைத் துளிகளாய்,
என்னிடம் வந்து,
வேண்டும் இடமெல்லாம்,
குளிர்ந்த முத்தங்களால்,
என்னை மயக்குகிறாய்...
என் மழையே!
0

காதலுடன் தென்றல்!


என் கண்கள் வழியே,
வழியும் அழகிய காதலுடன்...
உன்னைக் காண வேண்டுமென்று,
என் கண்கள் இரண்டையும்,
என்னிடமே கடனாய் வாங்கி...
நாள்தோறும் உன்னை சுற்றியே,
காதலுடன் திரிகிறது தென்றல்!

நிலா மகள்...


நிலவின் பொழிவுகளை,
பூக்களாய் எண்ணியே,
தினந்தோறும் கொய்வதால்...
நாள்தோறும் தேய்ந்து,
அமாவாசை நிலவாய்,
மறைந்தே போகிறான்!

உன் புன்னகைகளின்,
அழகிய பொழிவை,
தினந்தோறும் பரித்து...
தன் பொழிவை,
நாள்தோறும் கூட்டி...
பௌர்ணமியாய் வருகிறான்!