இப்படிக்கு பசுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இப்படிக்கு பசுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

இப்படிக்கு பசுமை - 4



என்னை தொட்டுச்
செல்லும் போது,
எந்தன் குளிர்ச்சியை
களவாடிச் சென்றாய்...

போகும் வழியதனில்,
மனித உயிர்களுக்கு,
தானமாய் தந்தாய்...

அன்று...
எங்கு காணினும்,
பச்சை மிளிர்ந்தது.
இன்று...
வறட்சியே எஞ்சியுள்ளது.

இத்தருணத்தில்,
மனித உயிர்களுக்கென,
குளிர்ச்சியை கேட்டால்,
நான்
என்ன செய்வேன்?

இப்படிக்கு,
பசுமை

இப்படிக்கு பசுமை - 3



பசும் பிடரியுதிர்த்த
பனையும் தென்னையும்,
தோல்கள் இழந்து
நரம்புகளாய் தோன்றும்
வேம்பும் மாமரமும்,
இளம் பச்சை ஆடையை
துறந்து அசையாது நிற்கும்
புற்களும் பயிர்களும்,
விடியலில்...
வெயில் கொடுமை தாங்காது
குடையேந்தும் மனித உயிர்களும்,
எந்தன் உயிர் தழைக்க
மழையை வேண்டி காத்திருக்கும்...

இப்படிக்கு,
பசுமை
2

இப்படிக்கு பசுமை - 2



பூக்கள் யாவும்
மலராது, பொய்த்து,
மடிந்து போகும்...

பயிர்கள் யாவும்
நாணல் காணாது,
அறுவடை சேராது,
காய்ந்து போகும்...

வற்றா நெய்தலும்,
நீர் காய்த்து...
பாலை நிலமாய்,
மாற்றமும் காணும்...

மனிதா...
இந்நிலை வாய்க்கும் காலம்
வெகு தூரம் இல்லை...
நின் துயர் கண்டு,
நான் வருந்தி
மடியும் காலமும்
தொலைவில் இல்லை...

இப்படிக்கு,
பசுமை
3

இப்படிக்கு பசுமை - 1



மரகதப் பச்சையை
மேனியில் கொண்ட
அழகிய மயிலும்
இன்று நிறமற்று
வருந்தி உலவுவதேன்?

கண்களை கொள்ளை கொள்ளும்
வயல்களும் பசுங்குழல் உதிர்த்து
வெண்மையாய் காய்த்து கிடப்பதேன்?

கறை தொட்டுத் திரிந்த
சீற்றமிகு கடல் அலைகளும்
வெகு தூரம் சென்று
கறை காணாது இருப்பதேன்?

நீரின்றி அமையா இவ்வுலகு
இன்று...
குடிநீருக்காக அலைவது ஏன்?

இவைகளுக்கு விடை கிடைத்தால்
வெகு நாட்கள் வாழ்ந்திருப்பேன்...

இப்படிக்கு,
பசுமை