Kavidhai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kavidhai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

அரங்கேற்றம்



ஆழிக்கரை பருமணலின்,

உட்புகும் அலை நீரே...

அங்கேயே சில நேரம்,

நகராது வாசம் செய்தால்...

என்னவளின்...

பாதச் சுவடுகளின்,

அழகியல் அரங்கேற்றம்,

அங்கேயே நிலைபெறும்!

0

ஆடை



இடையினில் முளைத்து,

மேலும் கீழுமாய் அலையாடி...

அங்கங்களின் மேல்,

அழகாய் ஆனந்தமாய் இழையோடும்...

ஆடை என்னும்,

நூலிழைக் கயவர்களுடன் தான்,

நித்தமும் என் போர்!