Rain Dew லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Rain Dew லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

மழைத் தூரல்

வெள்ளிக் கீற்றுகள்
விழியிரண்டில்
வீணை மீட்டி
எனை வதைத்தாய்
தாமரை இதழ்களின்
இராகம் பாடி
எனை அழைத்தாய்
கண்மணியே கார்மேகம்
கருங்கூந்தல் காற்றுடன்
மொழி பேசும் வித்தையை
கண்கொண்டேன்
விழியோடு விளையாடும்
வெறுமை கற்றுக்கொண்டாய்
வாட்டியது போதுமடி
என்னை உன் மனதின்
மழைத் தூரலாய்
தெளித்துக் கொள்ளடி