இன்னும் கொஞ்சம் நேரம்...
பேச எண்ணிய,
வார்த்தைகள் எல்லாம்...
கவிதைகளாய் குவிந்து,
கண்களில் ஒளிர்ந்த,
அந்த அழகிய நிமிடங்கள்...
இன்னும் கொஞ்ச நேரம்,
நான் இரசிக்க வேண்டும்!
ஆதவன்
ஒவ்வொரு நிமிடமும்,
உன் கீற்றுத் தூரிகையால்...
வானம் எங்கும்,
வண்ணம் வீசுகிறாய்!
ஆகையால்...
உன்னில் கொட்டிக் கிடக்கும்,
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களில்,
சிலவற்றை மட்டும் பரிக்கவே...
எட்டி எட்டி குதித்து,
உன்னை பிடிக்கப் பார்க்கிறேன்.
ஆனால் என் முகத்திலும்,
வெளிர் வண்ணத்தை வீசிவிட்டு...
அழகாய் மறைந்து போகிறாய்!
உன் கீற்றுத் தூரிகையால்...
வானம் எங்கும்,
வண்ணம் வீசுகிறாய்!
ஆகையால்...
உன்னில் கொட்டிக் கிடக்கும்,
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களில்,
சிலவற்றை மட்டும் பரிக்கவே...
எட்டி எட்டி குதித்து,
உன்னை பிடிக்கப் பார்க்கிறேன்.
ஆனால் என் முகத்திலும்,
வெளிர் வண்ணத்தை வீசிவிட்டு...
அழகாய் மறைந்து போகிறாய்!
பம்பரம்/Top

கயிற்றைக் கொண்டு,
சுழற்றி விடப்பட்ட,
ஒற்றை கால்,
பம்பரத்தை போன்றே...
என் மனதும்,
உன் நினைவுகளால்,
சுழற்றி விடப்பட்டு,
நொடி பொழுதும் நிற்காமல்,
உழன்று கொண்டே இருக்கிறது!
Like a whip,
that makes a top,
to swirl...
The thoughts about you,
makes my heart,
to swirl,
without any pause.
நிலவே முகம் காட்டு

அழகிய வெள்ளி நிலவை,
இதுவரை பார்த்ததே இல்லையாம்...
எனவே உன் முகத்தை,
எட்டி எட்டிப் பார்க்கிறது...
உன் கூந்தலில்,
ஒட்டிக் கொண்டிருக்கும்,
வெண்ணிற மல்லிகைகள்.
சிறுபிள்ளையாய் செய்வாயா?

இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?
இறைவா...

அன்பாலே உலகம் செய்து,
அழகான உறவுகளும் செய்தாய்!
உயிர்களை பிறக்கச் செய்து,
அதனை உடலுக்குள் புகவும் செய்து,
இறப்பையும் அறிய செய்தாய்!
மலருக்கு வாடை தந்து,
மலரும் வினை செய்தாய்!
சரிகம இசை தந்து,
அதனை காற்றினில் ஒலியாகச் செய்தாய்!
ஒலியை உணரச் செய்து,
மொழியை பிறக்கவும் செய்தாய்!
சூரிய குடும்பம் படைத்து,
அதனுடன் நிலவும் படைத்து,
ஒளியை எங்கும் படரச் செய்தாய்!
இரவு பகல் மாறுதலின்...
பாகுபாட்டையும் உணரச் செய்தாய்!
இறைவா...
இவை அனைத்தையும் செய்யச் சொல்லி,
உன்னை செய்து அனுப்பியவன் யாரைய்யா?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





