0

வண்ணங்கள்


கால்களை நெஞ்சில் பதித்து,
புன்னகைகளை காற்றில் வீசி,
எச்சில் குழைத்த கைகளினால்,
என்னை வருடும் பொழுதெலாம்...
என் மனம்,
புன்னகைகளை மறைத்து...
வண்ணங்களை தெரிக்கிறது!
0

காதலன்


மழைக் காலங்களில்,
மழைக் காதலனாய்...
மழையை இரசிக்கவில்லை,
மழலையாய்...
உன்னை மட்டுமே,
இரசித்துக் கொண்டிருந்தேன்!
0

அந்நியன்


அலை என்னும் காதலி,
ஒவ்வொரு முறையும்,
கடற்கரைக் காதலனை...
முத்தமிட்டு தான் பிரிகிறது

நீ மட்டும் ஏனடி...
என்னை தொடாமலேயே,
அழகிய கண் சிமிட்டலுடன்,
என்னை...
அந்நியனாக்கிப் பிரிகிறாய்?
0

இன்னும் கொஞ்சம் நேரம்...


Innum Konja Neram
பேச எண்ணிய,
வார்த்தைகள் எல்லாம்...
கவிதைகளாய் குவிந்து,
கண்களில் ஒளிர்ந்த,
அந்த அழகிய நிமிடங்கள்...
இன்னும் கொஞ்ச நேரம்,
நான் இரசிக்க வேண்டும்!
0

பேய் வீடு



பணமெனும், பேயின் வீட்டில்...
அகப்பட்டு உழன்றுக் கொண்டிருக்கும்,
ஒவ்வொரு மனிதனின் மனதில்...
ஆழமாய் புதைந்து கிடக்கும்,
அழகான இன்பப் புன்னகைகளை...
நன்றாய் துளையிட்டு எடுப்பது,
உன்னுடன் நான் இருந்து,
மனம் பகிரும் தருணங்களே!
0

ஆதவன்

ஒவ்வொரு நிமிடமும்,
உன் கீற்றுத் தூரிகையால்...
வானம் எங்கும்,
வண்ணம் வீசுகிறாய்!

ஆகையால்...
உன்னில் கொட்டிக் கிடக்கும்,
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களில்,
சிலவற்றை மட்டும் பரிக்கவே...
எட்டி எட்டி குதித்து,
உன்னை பிடிக்கப் பார்க்கிறேன்.

ஆனால் என் முகத்திலும்,
வெளிர் வண்ணத்தை வீசிவிட்டு...
அழகாய் மறைந்து போகிறாய்!
0

பம்பரம்/Top


கயிற்றைக் கொண்டு,
சுழற்றி விடப்பட்ட,
ஒற்றை கால்,
பம்பரத்தை போன்றே...
என் மனதும்,
உன் நினைவுகளால்,
சுழற்றி விடப்பட்டு,
நொடி பொழுதும் நிற்காமல்,
உழன்று கொண்டே இருக்கிறது!

Like a whip,
that makes a top,
to swirl...

The thoughts about you,
makes my heart,
to swirl,
without any pause.
0

நண்பன்


வைகறையில்...
இளங்காந்தற் கதிரவனைக் கண்டு,
நீராய் உருகும் பனித்துளியே...
உன்னைப் போன்றே,
உருகி வழிய,
ஒவ்வொரு உயிருக்கும்...
புன்னகை பூவோடு,
நட்பை பகிரும்,
தோழமை வேண்டும்!
0

நிலவே முகம் காட்டு


அழகிய வெள்ளி நிலவை,
இதுவரை பார்த்ததே இல்லையாம்...
எனவே உன் முகத்தை,
எட்டி எட்டிப் பார்க்கிறது...
உன் கூந்தலில்,
ஒட்டிக் கொண்டிருக்கும்,
வெண்ணிற மல்லிகைகள்.
4

வார்த்தைகள் இல்லா கவிதை...


இரு வரிகள்...
அதில் வார்த்தைகள்,
எதுவும் இல்லை...
ஆனாலும் கவிதை!

உன் விழியில் வரைந்த,
கண்மை வரிகள்...