விழிப்பாவை

பார்வையொளி படரவிடும்
கரும்பாவை நீக்கி
இருவிழிக்கொரு நிலவாய்
உனையமர்த்திப் பார்த்திருப்பேன்...

இமையே கூரையாய்
வேய்ந்து அரவணைக்க
வெண்ணிற வான்
நினைத் தாங்க
அமைதியின் பிறப்பிடமாய்
அன்பினால் அலங்கரித்து
என்றென்றும் வாழ்ந்திருப்பாய்
ஈன்றெடுத்த அன்னையே

4 பின்னூட்டங்கள்:

Unknown சொன்னது…

nice one.. good

பெயரில்லா சொன்னது…

cute one.....

GV சொன்னது…

காதலியை தான் கூறப்போகிறீர்ர்கள் என இருந்தால் அது
அன்னையென கவிதை என உருவெடுத்தது அருமை

வினோத்குமார் கோபால் சொன்னது…

தாயின் அன்பிற்கு எதனையும் ஈடாய் காட்ட இயலாது

விஜி, நவின் மற்றும் கீதா வெங்கட் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள்

கருத்துரையிடுக