14

உன்னை பார்த்து இரசித்தேன்



எப்படி தான் வரவழைத்தாய்?
என்னை,
நீ செல்லும் பாதையெல்லாம்...

தோழிகளிடம் பேசும் போதும்,
தங்கையோடு விளையாடும் போதும்,
தாய்மடி சாயும் போதும்,
குறுநகை உதிர்க்கும் போதும்,
குறும்புகள் செய்யும் போதும்,
கோவில் கருவறை பின் சுவற்றில்
தலைமுட்டி கும்பிடும் போதும்,
நந்தியோடு பேசும் போதும்,
உன்னை பார்த்து இரசித்தேன்.

ஒவ்வொரு நொடியும்
நிந்தன்
ஒவ்வொரு செயலையும்
இடையூறுகள் ஏதுமின்றி
எப்போதும் நான் இரசிக்க
நீ செல்லும் பாதையெல்லாம்
இப்படித் தான் வரவழைத்தாய்...

குரல்



எங்கோ ஓர் இடத்தில்
நீ இன்றி தனியனாய்,
உந்தன் நினைவுகளோடு
உறவாடி நான் இருக்க...
அழகாய் நீ அனுப்பும்
குரல் மட்டும் கேட்கிறதே...

தாயே உன்னை நான்
பிரிந்து வாழும் காலம்
சிறிது தான் என்றாலும்...

பிரிவு கொடியதாய்
தோன்றுவதன் காரணம்
நின் அன்பு
என்பதை மட்டும்
நான் அறிவேன் தாயே...
9

ஏனடி மலர்ந்தாய்?



மனத்திலும் குணத்திலும்
மென்மை கொண்ட
மேன்மையான மல்லிகையே
ஏனடி மலர்ந்தாய்?

என்னவள் விழிக்கும் காலம்
இன்னும் வரவில்லையே,
ஏனடி மலர்ந்தாய்?

அவள் பார்வை
உன்னை வருடி
மலர வேண்டிய மல்லிகையே
ஏனடி மலர்ந்தாய்?

தன் விரல் மொட்டுக்களால்
உன்னை வருட காத்திருக்கிறாள்
ஏனடி மலர்ந்தாய்?

வெண்மையை இரசித்து
அவள் நின்னை
இன்னும் முத்தமிடவில்லை
அதற்குள்ளாக
ஏனடி மலர்ந்தாய்?

என்னவள் கூந்தலுக்கு
வாடை வழங்கும் முன்னமே
ஏனடி மலர்ந்தாய்?

நீ
சுயநலம் கொண்டு
மலர்ந்தமையால்
நான் படும் பாடு
அறியமாட்டாய்...

மலர்ந்த மல்லிகையே
நீயுதிர்த்த வாடை
எந்தன் மனதை
இதமாய் வருடாமல்
சற்றே வருத்தியது...
12

தண்டனை...



முத்தத்தின் சத்தம்
உலகில் ஓய்திடினும்
எந்தன் மனதோடு
ஓயவில்லை...

அதன் ஈரம்
உதட்டோடு காய்ந்திடினும்
எந்தன் மனதோடு
காயவில்லை...

உணர்வுகளால் ஈர்த்து
உரைந்த இரத்தமும்
இதுவரை
தழலுற்று மீளவில்லை...

அந்த மெளனத்தில்
பார்வைக் கீற்றுகளாய்
ஒலித்த வார்த்தைகளும்
மறையவில்லை...

ஒற்றை முத்தத்தில்
அளித்த தண்டனையே
போதுமடி பெண்ணே
நாம் இருவரும்
சேரும் வரை...
6

அமிழ்து!



பல நாட்கள்
வற்றிய சோற்றை
உண்டே களைத்துவிட்டேன்...

வெண் தயிர் கொண்டு,
பழைய சோறு குழைத்து,
ஊறுகாய் தொட்டு தரும்,
பிடி சோறு போதுமே....
அமிழ்து உண்டு களித்ததாய்
எந்தன் நினைவினில் தோன்றுமே...

தாயே!
நான் அமிழ்துண்ண வருகிறேன்...
4

அன்பை என்வென்று சொல்ல?



மலர்ந்த முல்லை,
புற்களின் பனித்துளி,
தெரிக்கும் மழைத்துளி,
யாழின் இசை,
பைந்தளிர் கொடி,
காற்றின் கீதம்,
சங்கின் நாதம்,
நிலவின் ஒலி,
தெளிந்த நீர்,
அரிய அமுதம்,
பிள்ளையின் பார்வை,
மழலைச் சிரிப்பு
இவை யாவையும்
தூயதாய் கண்டால்
எந்தன் தாயே
நின் அன்பை
என்வென்று சொல்ல?
6

பதிவுகள்



கடற்கரை மணலிலும்,
காய்ந்த மரத்திலும்,
தேர்வு காகிதத்திலும்,
பச்சை இலைகளிலும்,
ஓடும் நீரிலும்,
வெந்நிற சுவற்றிலும்,
உலவும் காற்றிலும்,
உந்தன் மனதிலும்,
சின்னஞ்சிறு ஓவியங்களாய்...
நீ பதித்த
எனது பெயர்கள்...
3

மனதிற்குள் மெதுவாக



பெண்ணே! போதும்... போதும்...
இதற்கு மேலும் சிந்தாதே...

வாடையற்ற நின் புன்னகைகளை,
தினம் தினம் சேமித்தே,
எந்தன் ஆயுள் கழிந்துவிடும்...
மிளிர்தலில் கண்களும் மங்கிவிடும்...

வேண்டுமென்றால், இப்படிச் செய்,
உந்தன் மனதிற்குள் மெதுவாக,
வெகு நேரம் சிரித்துக்கொள்,
அங்கு வந்து கேட்டுக்கொள்கிறேன்!
11

காத்திருக்கிறேன்...



கொஞ்சி கொஞ்சி
என்னிடம் பேசுவாய்...

மிருதுவாய் வருடி
கன்னத்தை கிள்ளுவாய்...

தோள் சாய்ந்து
எண்ணங்கள் பகிர்வாய்...

என்னில் சாய்ந்து
வெட்கமும் உதிர்ப்பாய்...

விரல்களின் மீது
முத்தமும் இடுவாய்...

நின் வார்த்தைகளால்
அன்பும் பொழிவாய்...

இப்படி எல்லாம்
சின்ன சின்னதாய்
குறும்புகள் செய்வாய்!

இவை அனைத்தையும்
நான் இரசிக்க
வெகு நேரம்
உனக்காக காத்திருக்கிறேன்!
7

என்றென்றும் வேண்டுமடி



வாய் திறவாது வெட்கத்துடன்,
நாணி பிறக்கும் நகையும்...
இயற்கையின் வாடை பிடுங்கி,
மேனி நிறைத்த மணமும்...
பாதச் சுவடுகள், மணல் அலந்து,
தூரம் சென்று, பார்க்கும் பார்வையும்...
துன்பம் தலை தூக்கும் காலத்தில்,
ஆறுதல் தரும், நின் வார்த்தைகளும்...
நின் மடியில் நானிருக்க,
தலை கோதும் விரல்களும்...
என்றென்றும் வேண்டுமடி!
தாயாய் தாலாட்ட...
சேயாய் விளையாட...
தோழியாய் மனம் பகிர...
என்றென்றும் வேண்டுமடி
நீ எனக்கு...
2

என்று பிறந்தாய்?



என்னுள்ளே பிறந்து,
நானறியாமல் வளர்ந்தவளே...
என்னவளை கண்டதும்
முகத்தை மறைத்தவளே...
வெட்கத்தை மட்டும்
வஞ்சனை ஏதுமின்று
வாரி இரைத்தவளே...
அவளது பார்வையால்
சொடுக்குப் போட்டு
அழைத்ததும் சென்றுவிட்டாய்...

என் காதலே
நீ எப்போது
என்னுள்ளே துளிர்விட்டாய்?
5

ஆயிரம் அழகுகள்


பிள்ளையின் சிரிப்பில்
ஆயிரம் பருக்கைகள்
உண்டதாய் எண்ணுவாய்...

புரியா பிதற்றலில்
ஆயிரம் அர்த்தங்கள்
கண்டதாய் அறிவாய்...

விழியில் மையிட்டு
நுதற் பொட்டிட்டு
ஆயிரம் ஓவியங்கள்
ஒன்றாய் கண்டதாய்
ஆச்சரியத்தில் கொஞ்சுவாய்...

கன்னங்கள் கிள்ளி
அழகாய் கொஞ்சி
வருடி முத்தமிடுவாய்...

இவைகளை எண்ணியே
எந்தன் மனமின்று
பிள்ளையாய் மாறியதே
இவையெல்லாம் என்னைத்
தொட்டிலிட்டு தாலாட்டியதே
4

மீண்டும் பள்ளிக்கு போகலாம்...


உறங்காமல் கண் விழித்த நாட்கள்,
அயர்ந்து சுவரோடு சாய்ந்த நாட்கள்,
புத்தகத்தில் முகம் தொலைத்த நாட்கள்,
எழுது கோள்களுடன் பேசிய நாட்கள்,
நட்பு சகாக்களுடன் நகையாடிய நாட்கள்,
தாய் மடி தேடிய நாட்கள்,
இவ்வாறு...
கடந்த நாட்களைத் திரும்பிப் பார்த்திடினும்,
எண்ண ஏட்டுக்களை புரட்டிப் பார்த்திடினும்,
என்று வரும் இந்த சுகம்?
மீண்டும் பள்ளிக்கு போகலாம்...
5

அமாவாசை நிலவுகள்



விரல் எட்டிப் பார்க்கும்,
நகக் கண்களை வெட்டி,
மண்ணிற்கு தானம் வார்த்து,
வீணடித்தது போதும் பெண்ணே...

இம்முறை அவற்றை எல்லாம்,
தானமாய் என்னிடம் கொடுத்துவிடு.
வெண்ணிலவு இல்லா நாளன்று,
கார் வண்ண மேகத்தில்,
பொங்கும் வெள்ளிப் புன்னகைகளாய்!
வெள்ளிப் பிறை நிலவாய்!
நின் நகங்களை யாவும்,
அனுப்பி வைக்க எண்ணுகிறேன்.
6

இனியதாய் ஒரு உறக்கம்


நிறம் காய்ந்து உயிர் காயாத,
விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்...
பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு,
உன் மடியில் நான் உறங்க...
எந்தன் தலை கோதுவாய் பெண்ணே!
10

வெட்கத்தின் பிறப்பிடம்



முகம் முழுதும் வீசுதடி...
உந்தன்,
வெட்கம் எனும் பூங்காற்று!

பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி...
எந்தன்,
பார்வை எனுங் கீற்று!
6

நூலிழை அளவு வெட்கம் போதும்


நூலிழை அளவு தான்,
நிந்தன் வெட்கம் என்றாலும்...
போதும், போதும்
என்றது என் மனது.

பாவம்!

அவனுக்கு எப்படி தெரியும்?
நின் வெட்கத்தின் விலை,
மதிப்புகள் அற்றது என்று!
7

மீதமான வெட்கம்


கண்களின் ஓரம்
மிதமான குளிரும்;
முகம் முழுதும்
தெரித்து ஓடும்
மீதமான வெட்கமும்;
ஒன்றாகக் கிடைத்தால்
இதமான இரவில்...
நிந்தன் நினைவும்,
எந்தன் மனமும்,
ஒன்றாய் இணைய...
இமை இரண்டும்
வருடுதல் தகுமோ?
5

எந்நாளும் இரவாக...






நின் கூந்தலின்
வாடை நுகர்ந்தே
இரவினில் பாதி போனதடி

நின் விழியில்
இதழ் வருடி
மீதியும் பகலாய் ஆனதடி

நிலவாய் நானிருந்தால்
சூரியனை சிறையிட்டு
விடியலையும் இரவாக்கி
உன் வசப்பட்டு இருப்பேனடி