இடர் கொண்டு ஈன்றாலும்,
இன்பம் என்றே எண்ணினாய்!
பசித்தாலும் புசிக்காமல்,
எந்தன் பசியாற்றினாய்!
துன்பங்களை மறைத்துவிட்டு,
இன்பத்தை மட்டுமே,
பகிர்ந்து கொண்டாய்!
அவ்வப்பொழுது அரவணைத்து,
மனதில் தேக்கி வைத்த,
அன்பையும் பொழிந்தாய்!
உனக்குள் கருவுற்ற என்னை,
உடலும் உயிரும் தந்து,
தனியனாய்... ஏன்,
பிரித்து வைத்தாய்?