மனம் முழு நிலவாய்...
நீ...
இமை மூடும் போதெல்லாம்,
என் மனதில் ஏனோ,
இருள் சூழ்ந்து கொள்கிறது...
உன் பார்வையால்...
பிழைத்துக் கொண்டிருக்கும்,
என் மனதைக் கொல்லாதே...
சில காலம்...
சில்லறைச் சிரிப்போடு,
எந்தன் மனம்,
முழு நிலவாய், மிளிரட்டும்!
கனவுகளைக் கடனாய் கொடு...
உன் கனவை எல்லாம்,
எனக்கு கடனாய் கொடுத்துவிடு...
உந்தன் அனைத்துக் கனவுகளிலும்,
எந்தன் அன்பை கொண்டு...
என்னையே நிரப்பித் தருகிறேன்,
அது காதலின் நினைவுகளாகட்டும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)