கண்ணாடி குமிழ்
கண்ணாடி குமிழாய்,
கொடுக்கப்பட்ட மனதை,
ஆயிரம் துண்டுகளாய்,
உடைத்த பின்பு...
நீ நடக்கும் பாதையில்,
உன்னை வருத்தாது,
ஒவ்வொரு துண்டும்,
உதிர்ந்த மலராய்,
மாறுவதும் ஏனோ?
முதல் காதல்!
கரை அறியா கனவுகளும்,
உன்னை எண்ணியே மலர்ந்தன!
கனவுகளில் வாழ்தலும்,
உன்னுடனே நடந்தன!
ஆயிரம் ஆசைகளும்,
ஆயிரம் முத்தங்களும்,
உனக்காகவே பிறந்தன!
என்னுடைய...
முதல் காதலின்,
உன்னுடைய மறுப்பால்,
இவை யாவும்,
வேறோடு மடிந்தன...
காற்றோடு...
என்னை பார்க்கவே வந்துவிடும்,
உன்னுடைய வாரக் கடிதத்தையும்...
என்னுடைய நலமறிய அனுப்பப்படும்,
உன்னுடைய அலைபேசி குரலையும்...
எதிர்பார்த்து காத்திருந்த,
ஒவ்வொரு அழகான நொடியும்...
கல்லூரி விடுதியின் அறையில்,
காற்றோடு இன்றும் கலந்திருக்கிறது...
அன்பின் நினைவலைகளாய்!
எத்தனை எத்தனை கோலங்கள்...
தாயின் கருவில் உயிராகவும்,
அழுது பிறந்த பிள்ளையாகவும்,
தத்தித் தவழும் மழலையாகவும்,
உடன் பிறப்பிற்கு சகோதரியாகவும்,
நட்பிற்கு உற்றத் தோழியாகவும்,
இல்லறம் புகும் மனைவியாகவும்,
மணவாளனை ஈன்றவளுக்கு மகளாகவும்,
பிள்ளைபேறு பெற்று தாயாகவும்,
எத்தனை... எத்தனை... கோலங்கள் காண்கிறாய்,
பெண்ணே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)