Angel லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Angel லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

நிலவு தேவதை

இரவினிலே எனை ஈர்ப்பதெலாம்
வெண்ணிற வெள்ளி நிலவே
சூரியன் செத்துப் போகையிலே
விழிச் செதுக்கிப் பார்பதென்ன?

மரம் அறுந்த
அடர் கருங் காட்டினிலே
நீதானே இரவின்
இராட்சசியே...
உனக்குவமை சொல்
தேவதையே...
வெள்ளிச் சுடர் கொண்ட
பால் நிலவே!
0

தேவதை

வானத்து வனதேவதை
தன் முகம் முழுதும்
இளங் குங்குமத்தைத்
தெரித்தார் போல்
சிவந்து நிற்க
காரணம் என்ன?

விடியல் தொட்டு
நீ தெரிக்கும்
வெள்ளி கீற்றுகளால்
சிறுகச் சிறுக
அவள் நாணத்தை
சுட்டதனாலா?
பதில் வேண்டும்
ஆதவனே!