Fate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Fate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

மாய வினை!


யான் யாக்கை யாதென்று,
யான் கூறாது,
யாவரும் அறிந்திருக்க,
யான் செய்வது,
யாதென்று இயம்புவாய்!

யான் என்று ஏதுமில்லை…
யாக்கை என்பது பொய்மை நிலை…
யார் யாது செய்வதென்பதை,
யாரும் அறியாதிருப்பதே,
யாவருக்கும் அவன் விதித்த,
மாய வினை!

விதி

சில்லரைத் தேடி விழியிரண்டும்
வழிப்போக்கன் கை தன்னில்

சூரியக் கீற்று சுடர்விட்டும்
இருள் தோய்ந்த தென்ன
நின் முகம் அதனில்

பசிக் காலன் கயிறு கொண்டு
வயிற்றை சிறை பிடித்தான்
நின்னை நடுத் தெருவில்
விதியாலே ஆட்டி வைத்தான்