Rain லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Rain லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2

மழை


வரும் வரை
நின் வரவை
எதிர் பார்த்திருப்பேன்
வந்தபின் உன்னையே
பார்த்திருப்பேன்
அடி பெண்ணே
நீயும் மழை தான்
0

மழை

முதிர்ந்த முத்துக்கள்
உதிர்ந்து சேர்வது
நிலத்தினிலே...
மழையே

நிலத்தரைந்த
மெய் சிலிர்ப்பை
நின் சில்லொலி
சொல்லும் நேரத்தில்
மெளனமாய்
மண் சிவந்து
மணம் வீசி
வாடைத் தெரித்தது
0

மழை

நின் விழித் திரை
எனக்கு வழிவிடுமோ
உன் கருமணியில்
நிழலாட...

நின் மனதோடு
மழைவருமே
நான் அங்கே
வருகையிலே!