0

தலைவன் வருவான்...


கயற் பிம்பங் கண்டு,
சிறகு விரித்ததோ கொக்கு?
கூந்தல் வாடையால் மயங்கி
நர்த்தனம் ஆடியதோ காற்று?
படர்ந்து கிடக்கும் கார் கூந்தலை
மழை மூட்டம் என்றெண்ணி
நாட்டியம் ஆடுதோ மயில்?
இவை யாவும் நிகழ்தள் அறியாது,
பசலை நோய் கொண்டு...
தலைவன் வருகையை எண்ணி,
காத்திருக்கிறாள் தலைவி...

(நன்றி : ப்ரியா இரங்கநாதன்)
3

நன்றிக் கடன்



உன்னை
முதன் முதலில்
பார்த்த இடத்தில்
தினந்தோறும் மறவாது
பூ வைக்கிறேன்
உனக்காகவும்
உன்னைக் காட்டிய
கடவுளுக்காகவும்

நிலவினும் நீ அழகு



வானத்து தேவதைகளாய்,
மேகங்கள் சூழ்ந்து,
கதிர் வீசும் மலராக,
பூத்து நிற்கும் நிலவினும்...
இமை திறந்து ஒளிரும்,
நின் கருவிழிகள் என்றும்,
அழகு தான் பெண்ணே...
0

பொறாமைக்காரன்



"அரை குறையாய்,
வரைந்த ஓவியமே...
இத்தனை அழகோ?",
என்று எண்ணியே...
படைத்தவன் உன்னை,
பாதியிலேயே விட்டுவிட்டு,
தூரிகையாய்...
என்னை படைத்துவிட்டான்,
அந்த பொறாமைக்காரன்!
0

கனவுக் கன்னி



விழிகளை மட்டும்,
கனவில் காட்டும்,
அழகிய இராட்சசியே!

ஒரு முறையேனும்,
நின் முகத்தை,
காட்டிவிட்டு போ...

கனவு என்னும்,
இரவு ஆதவன்,
முழு மதியாய்,
மனதில் மிளிரட்டும்...

அடையாளங்கள்



ப்ரியமான முத்தமும்,
அழகான வெட்கமும்...
பார்வையின் கூச்சமும்,
உதட்டோர நாணமும்...
கன்னத்தில் குழியும்,
நாவின் மொழியும்...
மேலும் பலவும்...
உன்னிடம் யாசகமாய் பெற்ற,
நமது சந்திப்பின் அடையாளங்கள்
4

தேடும் கண் பார்வை...



அலைகள் அறியா...
வெண் கடலின்,
கருவட்டத் தெப்பம்,
மையிட்டக் கரையோரம்,
சுழன்று கொண்டே இருக்கிறதோ...
எந்தன் வரவை காண?
4

பேருந்தில் நீ எனக்கு...



என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

பேருந்து பயணத்தில்...
சன்னல் ஓரத்தில் அமர்ந்து,
காதுகளுக்கு இனிமையாய்,
இசை பகிர்ந்து கொண்டிருந்தேன்...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

போகும் இடம் அறிந்தும்,
நீ இறங்கிய,
பேருந்து நிறுத்தத்தில்...
என்னையும் இறக்கியது,
உன் சிரிப்பு...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

இசை மழை இருந்தும்...
நனையாது, இருக்கச் செய்த,
உந்தன் பார்வையும் சிரிப்பும்,
ஈர்த்துக் கொண்டே இருந்ததே...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

அன்று முதல்
ஒவ்வொரு
பேருந்து பயணத்திலும்
உந்தன் வருகைக்காக
காத்திருந்தேன்

பல நாள் தவத்தின்
பெரும் பயனாக
மீண்டும் வந்தாய்
அருகில் அமர்ந்தாய்

என்னை பார்த்து,
அன்றும் ஏனடி,
அழகாய் சிரித்தாய்?
4

எத்தனை அழகு?



சன்னதியில் பெற்ற,
குங்குமத்தை கையில் ஏந்தி,
நெற்றியில் இட்டு,
கோவிலைச் சுற்றி வந்து,
கடவுளை காணும்...
செய்கை அழகு!

கோவிலைச் சுற்றி,
நடக்கும் போது...
உந்தன் பாதம் சுற்றி,
நடனமாடி சிரிக்கும்,
சரிகை வேய்ந்த,
புடவையும் அழகு!

மெளனத்தாலும்,
கண்களாலும்,
மனதாலும்,
உந்தன் புன்முறுவலாலும்,
கடவுளிடம் பேசும்...
பாவனையும் அழகு!
3

காதல் கடிதம்


உன்னோடு பேசினேன்,
உன்னோடு பழகினேன்,
என்னோடு
உன்னை வைத்து,
ஓயாமல் பார்த்தேன்...
நேற்று வரை,
எந்தன் மனதோடும்,
உந்தன் நிழற்படத்தோடும்...

உன்னோடு பேச வேண்டும்,
உன்னோடு பழக வேண்டும்,
என் அருகில் உனை வைத்து,
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்...
இன்று முதல்,
என்றென்றும் உன்னோடும்,
உந்தன் மனதோடும்...

இவ்வாறு எண்ணியே
பல இன்று நேற்றாக மாறி
காற்றோடு கவிதையாய்
மறைந்தே போனதே...

ஆனால்...
இந்த இன்று மட்டும்,
இதற்கு விதிவிலக்கு...
ஏனென்றால் இக்கடிதம்,
உன்னிடம் வந்துவிட்டதே...

நான் உன்னை காதலிக்கிறேன்...