3

உயிரற்ற பூக்கள்

செடியில் உள்ள பூக்கள் யாவும்
உயிரற்று பிறக்கிறது
உன் கூந்தல் ஏறி நின்றி
உயிர் பெற்றுச் சிரிக்கிறது
நின் கூந்தல் வாடைக் கண்டு
பூக்கள் நாணி மடிகிறது
0

சூரியப் பெண்ணே

இலைத் தட்டு மனதின் மேலே
பனிக் கூட்டம் கூடு கட்டி
சூரிய வரவைப் பார்த்திருக்கும்
நினைவுகளே...

அவள் வரவைக் கண்டவுடனே
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடித்துப் பறப்பதேனோ?

பனிக் கூட்ட குளிர்ச்சி விரட்டி
சூரியப் பெண் கதிர்கள் யாவும்
மழைச் சாரல் தெரித்தது போதும்!

என் மனமுரைந்து என்னவளே...
சூரியப் பெண்ணே நீ
நடுங்க வேண்டாம்!

என் இரத்த மொட்டுக்கள் வந்து
மனக் கூரைக்குள் வாழும் உன்னை
குளிர் துரத்தி வெப்பம் தரிக்கும்.
2

இனிமை

நிறமற்ற நீரும் உருமாறி
கருநிறம் கொண்டது

நிலாப் பெண் சிரிப்பினிலே
மேகங்கள் நாணமுற்று
கருத்துப் போனது

நிலவழகால் ஈர்க்கக் கண்டு
நிழலாடச் செய்து
நீரும் சலனப்பட்டது

மேகக் கருஞ் சாந்தை
மரமேனோ கடன் வாங்கி
மேனி கருத்து
உயிரற்று நிற்கிறது

தலையை இடைச் செருகிய
கால்களை அணைத்தபடி
கைகள் கோர்த்தமர்ந்தவாறு
நின் நினைவுகளோடு
நீரின் சலனத்தை கலைத்தபடி
மெளனமாய் நானிருந்து
நல்லிரவைக் கழிக்க வேண்டும்

என் துணையென
நீயில்லா இரவினிலே...

சில நேரம் பிரிவும்
இனிமை தான் பெண்ணே...
4

வெற்றி

மண்ணில் புதையுண்டு
சில காலம் கடத்திவிட்டு
பச்சிளஞ் சிறகுகளை
நிலத்தைக் குடைந்து
இலைகளாய் கையசைத்து
வெளிவரும்
தளிரின் பெருமை
இதுவல்ல
நீரையுறிஞ்சி
சூரியச் சுடரிழுத்து
இளங் குழந்தையாய்
புன்னகைப் பூக்கும்
மொட்டுக்கள் தெரிவதும்
பெருமையல்ல
பெற்ற குழந்தை
வாழ்வது ஒருநாள்
எனினும்
மகிழ்ச்சியாய் மலரும்
மலர்கள் தான்
நின் வெற்றி
0

மழை

முதிர்ந்த முத்துக்கள்
உதிர்ந்து சேர்வது
நிலத்தினிலே...
மழையே

நிலத்தரைந்த
மெய் சிலிர்ப்பை
நின் சில்லொலி
சொல்லும் நேரத்தில்
மெளனமாய்
மண் சிவந்து
மணம் வீசி
வாடைத் தெரித்தது
0

கண்ணாடி

மனமென்னும் இருட்டறையில்
நினைவுகளைப் புதையலிட்டேன்
இருட்டினில் உருமாறி
நிழலுருவம் காட்டும்
ஊடுருவல் கண்ணாடிபோல்
என் நினைவுகள்
நின்னுருவம் காட்டத்தான்
2

முதல் ஹைகூ

மெளனமும் அழகு தான்
உதட்டோடு அல்ல
உந்தன் விழியோடு

குடும்பம்

ஐயிரண்டுத் திங்கள்
கருக் கல்லை
சிறை வைத்து
உயிரை உளியாக்கி
உடற் சுத்தியலால்
உயிரடித்து
நீ செதுக்கி வெளியுமிழ்ந்த
பேதையொன்று...
ஒருநாள் உனக்குப்
பெயர் சூட்டும்
அம்மா என்று...

உன்
சுட்டு விரல் நீட்டியே
நீ பெற்ற
புதுப்பெயர் போல்
தலைவனவன் பெற
ஈகைக் கொண்டு
பேதைக்கு
நீ காட்டும்
புதிய முகம்
அப்பா...

ஆசை ஆசையாய்
அருகே வந்து
தன் மடியில் பேதையை
தொட்டிலிட வேண்டுமாய்
இச்சைக் கொள்ளும்
சிறு தளிர் கொழுந்து
நீ செதுக்கிய
உயிர் பெற்ற
முதற் சிற்பம்...
0

இச்சை

இருட்டறையின்
வெளிர் ஒளியில்
மறுவுயிர் பெற
உயிர் தெரித்து
உறங்கும் நேரத்தில்
என் மெளனத்தை
காற்றுடன் கலந்து
நினைவுகள் யாவும்
இசைப் பாடும்...

இரவின் மெளனத்தை
விழித்திருந்து இரசிக்க
வேண்டுமாய் இச்சை
எனக்கு...
0

உறக்கம்

கண்கள் முன் நீளத் திரையிட்டு
கருஞ் சாந்து பூசிவிட்டு
நட்சத்திரங்களை தூவியே
நிலவென்னும் பொட்டு வைத்தேன்
இரவென்னும் தேவதையை இப்படியே
தினம் தினம் நான் செதுக்கி
ஓவியத்தை இரசித்த வண்ணம்
உறக்கமெனும் ஊர் சென்றேன்